காதல் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா? சுல்தான் படத்தில் 100 பேரில் ஒருவராக வந்தவரை கவனித்தீர்களா!

பரத் நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் காதல். இந்த படத்தை பார்த்து மனம் உருகாதவர்களே இருக்கவே முடியாது.

அந்த அளவுக்கு க்ளைமேக்ஸ் காட்சி அனைவரையும் பாதித்தது. அப்போதே காதலித்து திருமணம் செய்து கொண்டால் பாதிக்கப்படுவது ஆண்தான் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தார்கள். ஜாதியும் ஒரு காரணமாக அமைந்தது.

இந்த படத்திற்கு பிறகு பரத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறினார். அடுத்தடுத்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதை எதையுமே அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.

மாஸ் ஹீரோவாக ஆசைப்பட்டு மண்ணை கவ்வினார். இது ஒருபுறமிருக்க காதல் படத்தில் சென்னையில் பட வாய்ப்புக்காக அலையும் இளைஞர்களை வைத்து சில காமெடி காட்சிகள் இடம் பெற்றது.

அதிலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனக்கூறி பிரபலமான ஒருவர் சமீபத்தில் ஆட்டோவிலிருந்து ஒருவாய் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இறந்து கிடந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதே காமெடி காட்சியில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வேண்டும் என்பது தான் கனவு என்ற காட்சியில் நடித்தவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் 100 ரவுடி களில் ஒருவராக நடித்திருந்தார். இதை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதை எப்படியோ நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கண்டுபிடித்து விட்டனர்.

kadhal-actor-acted-in-sulthan-movie
kadhal-actor-acted-in-sulthan-movie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்