புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அதிக செலவு செய்து கே.டி.குஞ்சுமோனுக்கு ப்ளாப் ஆன 5 படங்கள்..ஷங்கரை வளர்த்து விட்டவருக்கு இப்படி ஒரு நிலைமையா.

ஒரு காலத்தில் பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்றால் அது கே.டி.குஞ்சுமோன் தான். ஏனென்றால் இவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் அதிக அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் யோசிக்காமல் பணத்தை வாரி வழங்குவதில் இவரைப் போல் யாரும் கிடையாது என்ற பெயரை எடுத்த ஒரு தயாரிப்பாளர். இயக்குனர் ஷங்கருக்கு இவர் ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களை கொடுத்து வளர்த்து விட்டவர். மேலும் இவர் அதிகமாக செலவு செய்து, ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு லாபத்தை கொடுக்காத ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ரட்சகன்: பிரவீன் காந்தி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ரட்சகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் நாகார்ஜுனா, சுஷ்மிதா சென், ரகுவரன், எஸ்பிபி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் ஒரு இளைஞன், அளவுக்கு அதிகமாக கோபம் படுவதால் அவருக்கு ஏற்படும் சிக்கலில் இருந்து காப்பாற்றி கோபத்தை குறைத்துக் கொண்டு வாழ்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திற்காக அதிக செலவு செய்து பிரம்மாண்டமாக எடுத்தார். ஆனால் இதில் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபமோ, போட்ட பணத்தை விட கம்மியாக தான் கிடைத்திருக்கிறது.

Also read: 5 படங்களால் ஆர் பி சௌத்ரி கையில் கூரையை பிச்சிக் கொட்டின கோடிகள்.. மொத்தமாய் ஏமாற்றிய ஜீவா

காதல் தேசம்: கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் வினீத், அப்பாஸ், தபு, எஸ்பிபி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் நட்புக்கும், காதலுக்கும் இடையே ஏற்படும் உணர்வை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தாலும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் போட்ட காசை விட குறைவாக தான் கிடைத்திருக்கிறது.

சூரியன் : பவித்ரன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சூரியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், ரோஜா, கவுண்டமணி மற்றும் மனோரமா ஆகியோர் நடித்தார்கள், இப்படத்தில் சரத்குமார் ஒருவரை சுட்டுக் கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட்டு தப்பித்து ஓடி வந்து தனது கடந்த காலத்தை மறந்து விட்டதாக நடிக்கிறார். பிறகு இவருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பது பற்றி கதையை எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வெற்றி பெற்றாலும் பெருத்த லாபத்தை கொடுக்கவில்லை.

Also read: காதலுக்கு அடையாளமாய் முரளி நடித்த 6 படங்கள்.. காதல்னா இதயம்னு காட்டிய ஹீரோ

சக்தி: ஆர்.ரகுராஜ் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சக்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் வினீத், யுவராணி, நிழல்கள் ரவி, வடிவேலு மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காதல், குடும்பம், ஏமாற்றம், நகைச்சுவை என்று கலவையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் லாபத்தை கொடுக்கவில்லை.

என்றென்றும் காதல்: மனோஜ் பட்நாகர் 1999 ஆம் ஆண்டு என்றென்றும் காதல் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ரம்பா, ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் காதலித்தவர்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் சராசரியாகத் தான் வெற்றி கிடைத்தது. இப்படம் தான் குஞ்சு மோனின் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஆகும்.

Also read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

- Advertisement -

Trending News