ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சூர்யாவுக்கு கரெக்டான ஜோடி அந்த நடிகை தான்.. ஜோதிகாவே வெளிப்படையாக சொன்ன விஷயம்

சினிமாவை பொறுத்தவரையில் பல காதல் கதைகளை நாம் கேட்டிருப்போம். அதில் திருமணத்தில் இணைவது என்பது சொற்பம் மட்டும் தான். அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் சூர்யா, ஜோதிகா. காதலித்தபோது எப்படி இருந்தார்களோ அதே புரிதலுடன் தற்போது வரை இருந்து வருகிறார்கள்.

இந்த சூழலில் சூர்யாவுக்கு இவர் தான் கரெக்டான ஜோடி என்று ஜோதிகாவே ஒரு நடிகையை கூறியுள்ளார். அதாவது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஜோதிகாவுடன் ஒரு நேர்காணல் நடத்தினார். அதில் சூர்யாவை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை ஜோதிகா பகிர்ந்தார்.

Also Read: மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி.. டாப் ஹீரோயினை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய படக்குழு

அப்போது சூர்யாவுக்கு கனகச்சிதமாக பொருந்தக்கூடிய ஜோடி என்றால் யார் என டிடி கேட்டிருந்தார். அதற்கு தன் பெயரைக் கூட ஜோதிகா கூறவில்லை. உடனே சூர்யாவுக்கு சூப்பரான ஜோடி என்றால் லைலா மட்டும்தான் என கூறியுள்ளார். மேலும் இவர்கள் சேர்ந்து நடித்த எல்லா படமும் தனக்கு பிடிக்கும்.

உன்னை நினைத்து, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியது போன்ற படங்களில் இவர்கள் ஜோடி அருமையாக அமைந்திருந்ததாக ஜோதிகா கூறியிருந்தார். சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களும் தனக்கு பிடித்ததாக கூறினார். இவ்வாறு தனது கணவராக இருந்தாலும் திரையில் ஒரு நடிகராக அவரை ரசித்து ஜோதிகா பல விஷயங்களை கூறினார்.

Also Read: எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்

அதுமட்டும் இன்றி ஒரு கணவராகவும் தனது கடமைகளில் இருந்து சூர்யா எப்போதுமே விலகியது கிடையாது. திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஜோதிகாவின் பெரும்பான்மையான படங்களை சூர்யா தனது 2டி என்டர்டைன்மென்ட் மூலம் தான் தயாரித்து வருகிறார்.

மேலும் ஜோதிகாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய வளர்ச்சி மட்டுமல்லாமல் தனது மனைவியின் ஆசையையும் சூர்யா பெரிதாக நினைத்து அதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார். சூர்யா, ஜோதிகா ஒரு அற்புதமான ஜோடி என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Also Read: வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!

- Advertisement -

Trending News