ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஜஸ்ட் மிஸ்ஸான வேட்டையன், கொக்கி போடும் லைகா.. பிடிகொடுப்பாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் வேட்டையன். இப்படத்தின் 2 ஆம் பாகம் பற்றிய தகவல் வெளியாகிறது.

ரஜினிகாந்த் இயக்கத்தில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர். ரித்திகா சிங், துவாசா விஜயன் உள்ளிட்டோட் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு செய்ய, லைகா பிரமாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வி நியோகம் செய்திருந்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரஜினியின் 170 வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி, சில மாதங்களாகவே இப்படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையி,ல், இதன் முதல் டீசர் வெளியாகி என்கடவுண்டர் காட்சிகள் இருந்தது, எண்கவுண்டரை ஆதரிப்பதுபோல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு, இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதை கோவில்பட்டி அரசுப் பள்ளி தவறாக சித்தரிக்கும் வகையில் வேட்டையன் திரைப்படத்தில் காட்சி உள்ளதாக தெரிவித்து, போலீஸீல் இயக்குனர் மீது புகாரளிக்கப்பட்டது.

தடைகளை தாண்டி வெற்றி

இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படம் தடைகளை தாண்டி, குறிப்பிட்ட தேதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வேட்டையன் படத்தில், கன்னியாகுமரியில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி அதியனுக்கு ( ரஜினி) அரசுப் பள்ளியில் மது பதுக்கப்படுவதைப் பற்றித் தகவல் கூறுகிறார் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் சரண்யா ( துசாரா விஜயன்).

அப்போது, சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை சுட்டு வீழ்த்துகிறார் ரஜினி. சென்னைக்கு டிரான்ச்பர் கிடைக்கும் சரண்யா சிலரால் கொடூரமாக பாதிப்பிற்கு உள்ளாகி கொலை செய்யப்படுகிறார். அப்போது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அந்தக் கொலையாளியை கொல்ல வேண்டும் என ஆசிரியர்கள் கூறி போராட, அந்த குற்றவாளி யார்? அவரை ரஜினி கண்டுபிடித்தாரா? என்ன தண்டனை கொடுத்தாரா? என்பது மீதிக் கதையாக உள்ளது.

இந்த நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திற்குப் ஞானவேல் இயக்கிய வேட்டையன் படம் ரஜினி படமாக வந்திருப்பதாகவும் இது கதைக்கு பெரும் பலவீனமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் முதல் 4 நாட்களில் ரூ.240 கோடி வசூலித்தது.

திடீர் மழை, வெள்ள பாதிப்பினால் மக்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில், கொஞ்சம் வசூல் குறைந்ததாக கூறப்பட்டாலும், கரணம் தப்பிய நிலையில் இப்படம் வெளியான 9 நாட்களில் ரு.300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

வேட்டையன் படத்தின் 2வது பாகம்

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் 2 வது பாகத்தை விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்படம் பற்றி ஞானவேல் மனம் திறந்துள்ளார். அதன்படி, வேட்டையன் படத்தின் 2 வது பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. ஆனால், அதியன் எப்படி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக மாறினார் என்பது பற்றிய கதையாக இது இருக்கும்.

அதேபோல், பகத் பாசில் திருடனாக இருந்து, போலீசுக்கு உதவி செய்பவராக மாறியது பற்றியும் கதை உருவாகும் என்று கூறி வேட்டையன் 2 படத்தின் சஸ்பென்ஸை உடைத்தை அதை உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிடிகொடுப்பாரா ரஜினி?

வேட்டையன் படத்திற்கு பின் ஞானவேல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தோசா கிங் என்ற புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதால், இப்படத்தை முடித்த பின் தான் வேட்டையன் 2 படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இப்படம் முதல் பாகத்தை விட நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிக லாபம் ஈட்டும் படமாக இருக்க லைகா விருப்பப்படுவதாகவும், ஆனால் இதுவரை 2 வது பாகத்தில் நடித்திராத ரஜினி இதற்கு சம்மதிப்பாரா? அல்லது வேறு யாராவது நடிப்பார்களா? என கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News