ஜூன் மாதத்தை குறி வைத்த 3 ஸ்டார்கள்.. சேனாதிபதி கமலுடன் மல்லுக்கட்டும் நடிப்பு ராட்சசன்

Actor Kamal : 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. எப்போதுமே ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம்.

ஆனால் இப்போது தேர்தல் நடக்க உள்ளதால் ஜூன் மாதம் மூன்று ஸ்டார்களின் படங்கள் வெளியாகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்த படங்கள் தான்.

அந்த வகையில் பல வருடங்களாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் ஜூன் 13 வெளியாகிறது. இந்தியன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் கண்டிப்பாக சாதனை செய்ய உள்ளது.

கமலுடன் மல்லுக்கட்டும் தனுஷ், விக்ரம்

அதுவும் சேனாதிபதியாக கமலை மீண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த சூழலில் கமலுக்கு போட்டியாக இரண்டு நடிகர்களின் படங்கள் ஜூன் மாதம் வெளியாகிறது. அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் ராயன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அவரே இயக்கி வரும் நிலையில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் போன்ற பிரபலங்களும் அங்கமாக இருக்கின்றனர். இப்படம் ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சேனாதிபதி கமலுடன் மல்லுக்கட்ட தங்கலானும் வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் கடந்த மாதம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஜூன் மாதம் வெளியாகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்