புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பச்சோந்தி போல் நிறம் மாறும் ஜோவிகா.. கன்டென்ட்டுக்காக செய்த வேலை, கிழியும் முகமூடி

Biggboss 7-Jovika: நித்தம் ஒரு சண்டையாக நகர்ந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் முகத்திரை இப்போதுதான் ஒவ்வொன்றாக கழண்டு கொண்டிருக்கிறது. அதில் பலர் மனதில் இருக்கும் வெறுப்புகளை வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்த நிலையில் சிலருடைய கிரேடு நல்ல விதமாக உயர்ந்து கொண்டும் இருக்கிறது.

ஆனால் ஆரம்பத்தில் நல்ல விதமாக பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் இப்போது எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதில் ஒருவர் தான் ஜோவிகா. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறு பெண்ணாக இருந்தாலும் பல நேரங்களில் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என இவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயத்தை வரவழைத்தது.

அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே விசித்ராவுடன் ஏற்பட்ட சண்டை, மட்டு மரியாதை இல்லாமல் அனைவரையும் ஒருமையில் பேசுவது என சில வெறுப்புக்கும் இவர் ஆளானார். அதையே ஆண்டவரும் தன்னுடைய பாணியில் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் விசித்ராவுடன் சண்டை போட்டு பிக் பாஸ் வீட்டை அல்லோலப்படுத்திய அவர் தற்போது அம்மா அம்மா என்று கொஞ்சி குலாவுவது புரியாத புதிராக இருக்கிறது.

ஏனென்றால் என்னுடைய அம்மாவை தவிர வேறு யாரையும் நான் அப்படி கூப்பிட மாட்டேன் என்று விசித்ராவை ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ஜோவிகா. ஆனால் இப்போது நீங்கள் ஊட்டி விட்டால்தான் நான் சாப்பிடுவேன் நீங்கள் எனக்கு அம்மா மாதிரி என்று கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல் சமீப நாட்களாக இவர்கள் இருவரின் உறவும் பாசப்பிணைப்பாக இருக்கிறது. இதை பார்க்கும் போது எது உண்மை என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனாலும் இது கன்டென்ட்டுக்காக செய்த வேலை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த வகையில் பச்சோந்தி போல் நிறம் மாறும் ஜோவிகாவுக்கு எதிராக சில விமர்சனங்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

மேலும் அவருடைய முகத்திரையும் தற்போது கிழிந்துள்ளதாக ஒரு கருத்தும் பரவி வருகிறது. இது போல் இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவர் மீது ஒருவர் இருக்கும் வன்மமும், போலியான நடிப்பும் அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. அப்படி பார்த்தால் இனி வரும் வாரங்களில் இந்த ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News