பாக்கியலட்சுமி சீரியலின் சீக்ரேட்டை உடைத்த ஜெனிஃபர்.. சீரியலை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆனது இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது. தொடக்கத்தில் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தற்போது விறுவிறுப்பை கூட்டி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளது.

இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி என்ற இல்லத்தரசி, இவரின் கணவர் கோபி, தன்னுடைய மனைவிக்குத் தெரியாமல் பள்ளித் தோழியான ராதிகாவுடன் பேசி பழகி கொண்டிருப்பார். இந்த ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஜெனிஃபர், அதன்பின்பு ஜெனிஃபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக பிக்பாஸ் ரேஷ்மா, தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே சமூக வலைதளங்களில் ஜெனிஃபரை ரசிகர்கள் பலரும், ‘ஏன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினீர்கள்?’ என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு பதிலளிக்கும்போதே ஜெனிஃபர்,

பாக்கியலட்சுமி சீரியலின் சிகரெட்டை உடைத்துள்ளார். ஏனென்றால் ஜெனிஃபர் ரசிகர்களிடம், ‘ராதிகா என்ற கதாபாத்திரம் தொடக்கத்தில் அமைதியாக சென்று கொண்டிருந்தது, இனி வரும் நாட்களில் ராதிகா கதாபாத்திரம்தான் வில்லியாக காண்பிக்கப்பட உள்ளதால், அதில் நடிக்க தனக்கு உடன்பாடில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.

அதன்பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த ஜெனிஃபருக்கு, சின்னத்திரை சீரியல்களிலும் நல்ல அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த பின்புதான் தெரிந்ததாம். ஏனென்றால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய பின்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான கமெண்ட்டுகள் அவரைத் தேடி வந்துள்ளது.

jenifer-cinemapettai
jenifer-cinemapettai

அதில் பெரும்பாலான ரசிகர்கள், ‘நீங்கள் மறுபடியும் ராதிகாவாக நடியுங்கள்’, ‘உங்களுக்காக தான் அந்த சீரியலையே பார்த்தேன்’, ‘நீங்கள் சீரியலில் இருந்து விலகியதை கேட்டதும் கண்ணீர் விட்டேன்’ என்றெல்லாம் ரசிகர்கள் தங்கள் அன்பைப் பொழிந்தனர். இதைத்தொடர்ந்து ஜெனிஃபர் நல்ல கதாபாத்திரத்துடன் இருக்கும் சீரியல்களில் மீண்டும் நடிக்க காத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்