சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வேட்டையன் படத்துக்கு சவாலாக வந்த ஜீவாவின் பிளாக் படம்.. 9 நாட்களாகியும் ஹவுஸ் ஃபுல்லான திரையரங்கம்

Jeeva Black Movie: எப்போதுமே ஒரு பெரிய படம் வருகிறது என்றால் அடுத்து எந்த படமும் அதனுடன் மோத மாட்டார்கள். ஆனால் பெரிய படத்துடன் ஏதாவது சின்ன படங்கள் வருவது வழக்கமாகி கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்ததும் கங்குவா படம் அப்படியே பின்வாங்கி விட்டது. ஆனால் அதற்கு பதிலாக ஜீவா நடிப்பில் வெளிவந்த பிளாக் படம் ரிலீஸ் ஆனது.

சமீப காலமாக ஜீவா நடிப்பில் வெளிவந்த எந்த படங்களும் மக்களிடம் எடுபடவில்லை. அதனால் ஜீவாவின் மார்க்கெட் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பையும் நல்ல கதைகளையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்கு ஏற்ப இயக்குனர் கேஜி பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் படமாக பிளாக் எனும் படத்தில் நடித்தார்.

ஆனால் ஜீவா எதிர்பார்த்தபடி பிளாக் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களையும் வாங்கி விட்டது. வேட்டையன் படத்தை விட இந்த படம் பார்க்கலாம் என்று மக்களும் அதிகப்படியான கருத்துக்களை கொடுத்ததால் தொடர்ந்து பிளாக் படம் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வரை முக்கால்வாசி திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக தான் இருக்கிறது.

அத்துடன் ரிலீசாகி 9 நாட்கள் ஆகி கிட்டத்தட்ட 3.5 கோடி லாபத்தை சம்பாதித்து இருக்கிறது. இது நிச்சயமாக ஜீவாவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. அத்துடன் இதில் ஜீவாக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பொதுவாக ஜீவா நடிப்பில் வெளிவந்த எந்த படமும் நன்றாக ஓடாது. அதே மாதிரி ப்ரியா பவானி சங்கர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படமும் ஃபெயிலியர் தான் என்று மக்களிடம் ஒரு விதமான கருத்துக்கள் இருந்தது. ஆனால் அது அனைத்தையும் சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு ஜெயித்து காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்து அதிகப்படியான டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி இருக்கிறது.

- Advertisement -

Trending News