முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்..  ஆண்டவருக்கே விபூதி அடித்த மோகன்லால்

jeetu joseph mohanlal starrer drishyam First Indian film to be remake in Hollywood: சிறந்த திரைக்கதையுடன் தரமான ஆக்கத்துடன் வெளிவரும் படங்களை ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அதனை அடிப்படையாக வைத்தே இன்று உருவாகும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படமாக உருவாகி அனைத்து தர மக்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

கலைக்கும், கலைஞனுக்கும் மொழி ஒரு தடை இல்லை. தரமான படைப்பு ரசிகனின் நெஞ்சத்தில் நிலைத்து நின்று தாக்கத்தை ஏற்படுத்தும் அப்படி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எதார்த்தமான கதையை விறுவிறுப்பாக கூறி பார்வையாளர்களை சபாஷ் போடச் செய்தது ஒரு மலையாள படம்.

மலையாளத்தில் 2013 ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த த்ரிஷ்யம் படம் தான் அது. படிக்காத தற்குறி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவன், தனது குடும்பம் என்று வரும்போது சட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு தர்மத்தின் வழியில் தன்னைச் சார்ந்தவர்களை காப்பாற்ற முனைவதே த்ரிஷ்யம். 

Also read : ராணுவத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு போன ஈமெயில்.. வந்த கரும்புள்ளியால் பதறிப்போய் ஆண்டவர் அடித்த அந்தர்பல்டி

மோகன்லாலுக்கு சொந்தமான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இதனை தயாரித்து இருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் உலகநாயகன் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சிங்களம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்து வசூலில் வெற்றி நடை போட்டது. 

ஆக்சன், ஆர்ப்பாட்டம் என எதுவும் இல்லாமல் சாமானியனின் நிலையில் சற்று அதிகமாக யோசிக்க வைத்த இந்த திரைக்கதையின் சுவாரசிய தன்மை காரணமாக இந்தியாவை தாண்டி சீன மொழியிலும், ஜப்பான் மொழியிலும் ரீமேக் ஆனது. தற்போது இதன் பெருமையின் ஒரு படி கூடுதலாக ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைபடமாகிறது. 

ஹாலிவுட்டில் கல்ப்கிளாசிக் நிறுவனம் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸிடம் இதற்கான உரிமையை வாங்கி உள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 10 மொழிகளுக்கும் மேலாக ரீமேக் செய்து வெளியிடும் திட்டத்தையும் கொண்டு உள்ளாராம் மோகன் லால். திக்கெட்டும் பரவுகிறது இந்தியனின் பெருமை!

Also read:கமலை நம்பி காசை வாரி இறைக்கும் பிரபலம் .. எல்லாம் அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை