ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜெயம் ரவி பிசியாக நடித்து வரும் 7 படங்கள்.. பொன்னியின் செல்வனால் அடித்த சுக்கிர திசை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் நுழைவதற்கு இவருடைய அண்ணன் முக்கிய காரணமாக இருந்தாலும் தொடர்ந்து இவருடைய விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் இவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்லலாம். இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் வெற்றி படங்களாக கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.

ஆனால் இவரும் ஒரு கட்டத்தில் இவருடைய மார்க்கெட்டை இழந்து, இவர் நடித்த படங்கள் சுத்தமாக ஓட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்த படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் ஒரு வரலாற்று மிக்க படமாகவும், மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. இதில் இவருடைய கதாபாத்திரம் அருள்மொழிவர்மன் என்ற கேரக்டரை அழகாக நடித்துக் காட்டி இவருடைய செகண்ட் இன்னிங்ஸில் ஆழமாக கால் பதித்து விட்டார் என்றே சொல்லலாம்.

Also read: பொன்னியின் செல்வன் போஸ்டரில் ஏற்பட்ட குழப்பம்.. அவமானத்தை நாசுக்காக திருத்திய ஜெயம்ரவி

இந்த வெற்றி படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார். முக்கியமாக நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரு நிலையான நடிகர் என்ற முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்கு தான். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவருடைய நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் இவர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கு அடுத்ததாக எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் இறைவன். இப்பொழுது இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தை இயக்குபவர் இயக்குனர் அகமது. இப்படம் விரைவில் திரையரங்களில் வெளிவர இருக்கிறது. இதற்கு அடுத்து ஜெயம் ரவியின் 30வது படத்தை எம் ராஜேஷ் இயக்குகிறார்.

Also read: 100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

அடுத்ததாக சைரன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இவரின் அடுத்த படமான ஜன கன மன படத்தையும் இயக்குவது இறைவன் படத்தின் இயக்குனர் அகமது தான். இவர் கூட்டணியில் இரண்டு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து இவரின் 32 வது படமான JR32 இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து அதிக படங்களில் கமிட் ஆகி வெற்றி நடிகராக வலம் வர வேண்டும் என்று முழு நேர வேலையாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பாலிவுட்டில் ஜெயம் ரவி.. அஜித் பட தயாரிப்பாளரின் பக்கா பிளான்!

- Advertisement -

Trending News