19 வருட சினிமா பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி, தற்போது வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவி அவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிருக்கிறார்.
தற்போது ஜெயம் ரவி, மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி உள்ளது. மேலும் இவரது 25-வது படமான பூமி கடந்த ஆண்டு வெளியாகி, எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
அதைத்தொடர்ந்து ‘அகிலன்’, ‘இறைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் கையில் இல்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவருக்கு படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.
ஆகையால் மணிரத்தினத்தின் பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வனை நம்பி, ஜெயம் ரவி ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார். இப்போது தனது அண்ணன் படமான தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை குறிவைத்து பல வேலைகள் செய்து வருகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் அண்ணன் எம் ராஜாவின் இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் தனி ஒருவன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
வெறும் 18 நாளில் 75 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீசை மிரள விட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என ஜெயம் ரவி காத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தன் அண்ணனிடம் உரிமையாக தனி ஒருவன் 2-வை எடுக்க சொல்லி டார்ச்சர் கொடுக்கிறாராம்.