வெளிய போன ரெண்டு பேரும் மணிரத்தினத்திடம் சரண்டர்.. ஜெயம் ரவி, துல்கர் மனம் மாறியதன் பின்னணி

Jayam Ravi and Dulkar who went out surrendered to Mani Ratnam: மணிரத்தினம் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இணைந்த நாயகன் திரைப்படம், வெளிவந்து பல ஆண்டுகள் கடந்த போதும் இன்று வரை அப்படத்தைப் பற்றிய விமர்சனங்களும் பேச்சுக்களும் ஏதாவது ஒரு மேடையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

பல வருடங்களுக்குப் பின்பு இதே கூட்டணி இன்று தக் லைஃபில் ஒன்றிணைந்து உள்ளது. கடந்த ஆண்டு ரங்கராய சக்திவேல் நாயக்கன் காயல்பட்டினக்காரன் என்ற அதிரடியான அறிவிப்புடன் களம் இறங்கினார் கமலஹாசன்.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய தக் லைஃபில் உலக நாயகனுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் என பல முன்னணி நட்சத்திரங்களும் ஒன்றிணைவது முடிவானது.

இந்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான போதும்  படத்திற்கான வேலைகள் காலதாமதத்துடனே நடைபெற்று வந்தது.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தல் வந்ததால் கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் பிஸியாகிப்  போனார்.

முறையான அறிவிப்பு மற்றும் கால் சீட் தொடர்பான பிரச்சனை காரணமாக துல்கர் சல்மான் மணிரத்தினம் கூறி  திரைப்படத்திலிருந்து விலகினார்.

துல்கர் சல்மானின் கதாபாத்திரத்திற்கு  சிம்புவை தேர்வு செய்தார் மணிரத்தினம். சிம்புவின் வரவு உறுதியானதால் ஜெயம் ரவி பல்வேறு காரணங்கள் கூறி தக் லைஃபிலிருந்து விலகினார்.

சுதா கோங்குராவின் இயக்கத்தில் சூர்யா மற்றும் துல்கர் சல்மான் இணைய இருந்த புறநானூறு திரைப்படம் கைவிடப்பட்டதால் கால்சிட்  பிரச்சனை சுமுகமாகி விட துல்கர் மீண்டும் தக் லைஃபில் இணைந்தார்.

துல்கர் வந்த போதும் சிம்புவின் கதாபாத்திரம் உறுதியானது. அதுமட்டுமின்றி சிம்பு இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் ஜெயம் ரவியை மணிரத்தினத்தின் துணைவியார், நடிகை சுகாசினி அவர்கள் சமாதானம் செய்தும், கால்ஷீட் பிரச்சினைகளை சரி செய்தும் மீண்டும் அவரை தக் லைஃபில் இணைய வைத்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தக் லைஃப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சைபீரியா செல்ல உள்ள பட குழு

இறுதியாக அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்து விட்ட போதும், மெயின் கேரக்டர் தேர்தலில் பிஸியாக உள்ளதால் தேர்தல் முடிந்த மறுநாள் தக் லைஃப்  படக் குழுவினர் அனைவரும் சைபீரியா செல்ல உள்ளதாக தகவல்.

சைபிரியாவில் படமாக்கப்படும் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் இவர்களுடன் கமலஹாசன் கலந்து கொள்ள உள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்