குடும்பத்தையே மிரட்டிய பிரபல நடிகை.. கந்து வட்டியால் சிக்கிய பிரபலம்

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி வெள்ளித்திரையிலும் சில படங்களில் காட்சிகளில் நடித்துள்ளார். சின்னத்திரையில் சில நெடு தொடர்களிலும் நடித்துள்ளார். கல்யாண பரிசு, முள்ளும் மலரும், பூவே உனக்காக போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பாஜகவில் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பொது மக்களுக்கு உதவி செய்து அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மக்களின் பாராட்டை பெற்று வந்தார்.

இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு பெண் ஒருவர் புகாரை அளித்துள்ளார். சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் கீதா, இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவி குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரிடம் பாஜகவை சேர்ந்த ஜெயலட்சுமி எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் பத்து பைசா வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி 9 பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்றுத்தந்தார். அதற்கு ஒவ்வொரு இடமும் இருந்த அவர் வங்கிக் காசோலைகளை ஜாமீன் பெற்றார்.

நாங்களும் மாதாமாதம் பணம் செலுத்தினோம் தற்போது தங்கள் கொடுத்த தொகை வட்டி என கூறி இன்னும் அசல் தொகை கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். மேலும் ஜெயலட்சுமி அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களையும் எங்கள் வீட்டாரின் கூண்டோடு அழித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

jayalaxmi-bjp
jayalaxmi-bjp

ஆகையால் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மக்களுக்கு உதவிகளையும் செய்து வந்த நிலையில் இதுபோன்ற செய்தி உண்மையா என்பது குறித்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை காவல்துறை விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.