முதலமைச்சர் பதவியை கொடுக்க ஆசைப்பட்ட ஜெயலலிதா.. இறப்புக்குப் பின் வீண் பப்ளிசிட்டி தேடும் நடிகை

இரும்பு பெண்மணி, சிங்கப் பெண் என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தன் முத்திரையை பதித்தார். இவர் மீது பல புகார்களும், குறைகளும் சொல்லப்பட்டாலும் இவருடைய தைரியத்தை எதிரிகளே பாராட்டுவார்கள். அந்த அளவுக்கு ஒரு கெத்துடன் இருந்த இவர் பிரபல நடிகை ஒருவரை தன்னுடைய இடத்திற்கு கொண்டுவர ஆசைப்பட்டிருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது வெளியாகி சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இப்போது நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அந்த பெயர் நடிகை விஜயசாந்திக்கு சொந்தமாக இருந்தது. ஏனென்றால் ஆக்சன் படம் என்றாலே அவர்தான் என்று சொல்லும் அளவுக்கு சண்டைக் காட்சிகளில் அவர் பட்டையை கிளப்புவார்.

Also read: யாரிடமும் தலைவணங்காத அயன் லேடி ஜெயலலிதாவின் அறியாத சுவாரசியங்கள்.. முதல் சம்பளமும், தீராத சோபன் பாபு காதலும்

அந்த வகையில் இவர் படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தைரியசாலியாக தான் இருக்கிறார். அதனால் ஜெயலலிதாவுக்கு இவரை ரொம்பவும் பிடிக்குமாம். அதன் காரணமாகவே தன்னுடைய கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு பலமுறை விஜயசாந்தியிடம் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

ஏனென்றால் அவருக்கு தமிழக அரசியலை விட ஆந்திர அரசியல் தான் மிகவும் பிடித்திருக்கிறது. அதனாலேயே அந்த கோரிக்கைக்கு அவர் மறுப்பு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் ஜெயலலிதா சிறைச்சாலைக்கு செல்லும் முன்பு இவரிடம் என்னுடைய கட்சிக்கு வந்து விடு, உனக்கு முக்கிய பொறுப்பு தருகிறேன்.

Also read: தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி

அதன் பிறகு விரைவில் உன்னை முதலமைச்சராகவும் மாற்றி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நீ ரொம்பவும் தைரியசாலி, உன்னால் மட்டும் தான் என்னுடைய கட்சியை பொறுப்பாக கவனித்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் விஜயசாந்தி அதற்கு முடியாது என்று கூறியதால் ஜெயலலிதாவின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போயிருக்கிறது.

இந்த விஷயத்தை அவர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதைப் பார்த்த பலரும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது இதை ஏன் நீங்கள் கூறவில்லை. அவர் இறந்த பிறகு நீங்கள் கூறுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் வீண் பப்ளிசிட்டி தேடாதீர்கள் என்று கூறி வருகின்றனர்.

Also read: ரஜினி, ஜெயலலிதா தலையெழுத்தை அப்போதே கணித்த காமெடியன்.. ஜோசியம் மூலம் நடந்த உண்மை சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்