இரட்டை இலைக்கு வாக்களித்து உங்கள் விஸ்வாசத்தை காட்டுங்கள்.. தேவேந்திர குல ஜான்பாண்டியன் வைத்த கோரிக்கை

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவுக்காக தமிழக முதல்வர் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஜான்பாண்டியன் இரட்டை இலைக்கு ஓட்டு போட தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஜான்பாண்டியன் நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்ய சட்ட மசோதா தாக்கல் செய்த போது திமுக வெளிநடப்பு செய்து புறக்கணித்ததை குறிப்பிட்டு திமுகவின் மீது குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜான்பாண்டியன் தேவேந்திர குல வேளாளர்கள் என 40 வருடங்களுக்கு பிறகு பெயர் மாற்றம் செய்ய உதவி செய்தது அதிமுக அரசு தான் என்றும், அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தினர் அனைவரும் இந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

john pandian
john pandian

எனவே, ஜான்பாண்டியன் இவ்வாறு தேவேந்திர குல வேளாளர்கள் என பெயர் மாற்றம்  உறுதுணையாக இருந்த அதிமுகவிற்கு நன்றி கூறும் வகையில்  அச்சமூகத்தினர் அனைவரையும்  இரட்டை இலைக்கு  வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -