என்ன சாரே! ஜெயிலர் மூலம் கிடைத்த புகழை ஒரே நாளில் காலி செய்த விநாயகன்.. தட்டி தூக்கிய போலீஸ்

Jailer Villian Vinayagam Arrested: வெற்றி வந்தால் பொறுமையாக இருக்க வேண்டும். ஓவராக குதிக்க கூடாது என்பதற்கு ஜெயிலர் பட வில்லன் உதாரணமாகிவிட்டார். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த இவர் விஷால் நடித்த திமிரு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானார். அதன் பின்னர் சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

விநாயகனுக்கு ஜெயிலர் படம் தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இவர் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராவார். தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக மாநில விருது வாங்கி இருக்கிறா.ர் மேலும் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் இவர் நடித்த கேரக்டருக்கு முதலில் பெரிய நடிகர் ஒருவர் பேசப்பட்டு பின்னர் தான் இவர் நடித்தார்.

அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பு திறமையால் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனை கவர்ந்திருக்கிறார். விநாயகத்திற்கு ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு அதிக அளவில் பெயர் கிடைத்தது. இப்போது கிடைத்த புகழை மொத்தமாக டேமேஜ் செய்யும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நடிகர் விநாயகன் கேரள போலீசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

விநாயகன் தன்னுடைய வீட்டில் மனைவியுடன் பயங்கரமாக சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் கடுப்பான அக்கம் பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் விரைந்து வந்து விநாயகத்தை விசாரித்து விட்டு வரும் செவ்வாய்க்கிழமை போலீஸ் ஸ்டேஷனில் வந்து ஆஜராகும் படி சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தான் விநாயகம் அவசரப்பட்டு விட்டார்.

விநாயகன் நேற்று இரவு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று காவலர்களை தரக்குறைவாக பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் காவல் நிலையத்திலேயே புகைப்பிடித்து இருக்கிறார். இதனால் இவரை மது அருந்தி இருக்கிறாரா என்று சோதித்து இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது தெரிந்ததால் அவரை கைது செய்து இருக்கிறார்கள். பின்பு இரவு 10 மணி அளவில் ஜாமீனில் வெளியில் அனுப்பியிருக்கிறார்கள்.

ஜெயிலர் பட ரிலீசுக்கு பிறகு விநாயகன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இப்படி சினிமாவில் நல்ல எதிர்காலம் உருவாகிக்கொண்டிருக்கும் பொழுது, மது அருந்தி கைதானது இவருடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்