திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 3 நாள் வசூல் ரிப்போர்ட்

Jailer Collection Report: திருப்பி அடிச்சா இப்படி அடிக்கணும் என்ற கதையாக தான் இருக்கிறது ஜெயிலர் படத்தின் வசூல் ரிப்போர்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படம் கடந்த வியாழன் அன்று வெளியானது.

ஏகப்பட்ட நட்சத்திரபட்டாளங்கள் நடித்திருந்த இப்படம் முதல் நாளிலேயே வேற லெவலில் கொண்டாடப்பட்டது. அதிலும் தலைவரின் வெறித்தனத்தை பார்த்த ரசிகர்கள் சொல்ல முடியாத சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனார்கள்.

Also read: கோடியில் புரண்டாலும் படுக்கை தரையில் தான்.. சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

அது மட்டுமல்லாமல் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஜெயிலர் வசூலிலும் சோடை போகவில்லை. அந்த வகையில் முதல் நாளிலேயே 95 கோடிகளை வசூலித்து இருந்த இப்படம் இரண்டாவது நாளில் 56 கோடி வரை வசூல் வேட்டை ஆடியது.

இப்படி இரண்டு நாளிலேயே 150 கோடி லாபத்தை சன் பிக்சர்ஸ் அடைந்திருந்தது. அதை தொடர்ந்து மூன்றாவது நாளும் படத்திற்கான அலப்பறை அதிகமாகவே இருந்தது. அதன்படி நேற்று வார இறுதி நாள் என்பதால் படத்தின் வசூலும் ஏறுமுகமாகவே இருந்தது.

Also read: மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் மூன்றாவது நாள் முடிவில் ஜெயிலர் 68 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த மூன்று நாட்களிலேயே சன் பிக்சர்ஸ் உலக அளவில் 220 கோடி லாபம் பார்த்து கல்லா கட்டி இருக்கிறது. இதன் மூலம் பல படங்களின் சாதனையை சூப்பர் ஸ்டார் முறியடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த வசூல் இருப்பதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த வசூல் இரு மடங்கு அதிகமாகும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளது. இதனால் தலைவரின் நான்காவது நாள் அதிரடியை காண ஒட்டுமொத்த திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்