சூர்யாவின் ஜெய் பீம் ஜெயித்ததா இல்லையா.? ட்விட்டர் விமர்சனங்கள்

சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் ஜெய் பீம். சூர்யா முதல் முறையாக வக்கீலாக நடித்துள்ள இப்படம் இருளர் இனமக்களள் வெளிச்சத்திற்காக போராடும் கதைகளத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படத்திற்கு ரசிகர்களின் கருத்து என்ன என்பதை பார்க்கலாம்.

கடந்த 1995ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய்பீம் படம் உருவாகி உள்ளது. அதன்படி இருளர் இனத்தை சேர்ந்த மணிகண்டனை திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்து கூட்டி செல்லும் காவல்துறையினர் சிறையில் அவரை அடித்து துன்புறுத்துகின்றனர். இதற்கு எதிராக மணிகண்டனின் மனைவி லிஜோமோல் ஜோஸ் வழக்கறிஞர் சூர்யாவுடன் இணைந்து போராடுகிறார்.

அவருக்கு நியாயம் கிடைத்ததா? மணிகண்டன் மீதான திருட்டு வழக்கு நிரூபிக்கப்பட்டதா? மணிகண்டனின் நிலை என்ன ஆனது என்பதே ஜெய்பீம் படத்தின் கதை. ஒரு படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட கதாபாத்திர தேர்வு மிகவும் முக்கியம். அந்த வகையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் தேர்வு செய்துள்ள கதாபாத்திரங்கள் சிறப்பு.

master-jaibhim-review
master-jaibhim-review

நாயகனாக நடித்துள்ள மணிகண்டன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அதேபோல் தனது கணவருக்காக போராடும் ஒரு மனைவியாக லிஜோமோல் ஜோஸ் தனது நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தி உள்ளார். வழக்கறிஞர் வரும் நடிகர் சூர்யாவும் அவரது பங்களிப்பை திறம்பட அளித்துள்ளார்.

vignesh-shivan-review-jaibhim
vignesh-shivan-review-jaibhim

இருளர் இன மக்களின் அறியாமையை சிலர் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை இயக்குனர் ஞானவேல் மிகவும் அழுத்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் வெளிப்படுத்தி இருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் பணியை சிறப்பாக செய்துள்ளதால் படத்தை எந்த ஒரு இடத்திலும் குறை சொல்லவே முடியவில்லை.

jaibhim-review-1
jaibhim-review-1

சூர்யாவிற்கு மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே ஜெய்பீம் படம் ஒரு திருப்புமுனையாகவே இருக்கும். படத்திற்கும் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்களையே அளித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு எந்த விதத்திலும் குறை கூற முடியாது என்பது தான் உண்மை. மொத்தத்தில் ஜெய்பீம் படம் தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான சம்பவம் என்று தான் கூற வேண்டும்.

jaibhim-review-4
jaibhim-review-4

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்