ஜெய் பீம் படத்தில் ரசிகர்களை கதற விட்டது இந்த நடிகையா? செம க்யூட்டான ஒரிஜினல் போட்டோ

லிஜோமோல் ஜோஸ் மலையாள சினிமாவில் அறிமுகமாகி இயக்குனர் சசி இயக்கத்தில் 2019-ல் வெளியான சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளத்தில் நடித்த மகேஜிண்டே பிரதிகாரம் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, லிஜோமோல் ஜோஸ்க்கு நல்ல வரவேற்ப்பை வாங்கி தந்தது.

இதையடுத்து நிறைய படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதை லிஜோமோல் ஜோஸ் பெற்றார். சமீபத்தில் இவர் நீண்டகால நண்பரான அருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து பிரகாஷ்ராஜ், ராஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தில் ஜெய் பீம் சூர்யா சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ஜெய் பீம் படம் 1995 இல் இருளர் இனத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இருளர் இனத்துப் பெண்ணாக திருட்டு வழக்கில் கைதான தன் கணவன் மணிகண்டனை காப்பாற்ற வழக்கறிஞர் சூர்யாவுடன் லிஜோமோல் ஜோஸ் போராடுகிறார்.

jaibhim-actress-1
jaibhim-actress-1

கடைசியில் தன் கணவரை மீட்டாரா என்பதே படத்தின் இறுதி கதைக் களமாகும். தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்தார் இவரா என ஆச்சரியப்படுகிறார்கள். ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் மிகவும் சிறப்பாக நடித்துள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்