நம்பி மோசம் போன ஜெய்.. சிம்பு லெவலுக்கு வரவேண்டியது, அடுத்தடுத்து விழும் அடியால் சறுக்கல்

ஜெய் தமிழ் சினிமாவில் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை-28 என்ற படத்தில் நடித்தார். அதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இவர் ஒரு சாயலில் விஜய் போலவும் குரலில் சிம்புவை போலவும் பேசுவார். இதனால் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இவர் எப்பொழுதும் எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ரொம்ப ஜாலியாக குடியும், கும்மாளம், பார்ட்டி என எப்பொழுதும் இருந்து வந்தார். இடையிடையில் ஒவ்வொரு படங்கள் நடித்தார், ஆனால் படங்கள் ஹிட் ஆகவில்லை. இவர் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அஞ்சலியுடன் காதல் வயப்பட்டார். அஞ்சலியுடன் சுற்றுவதை முக்கியமாக கருதி படங்களில் நடிக்க மறுத்தார்.

அஞ்சலியும் விட்டு சென்று விட்டதால் குடிக்கு அடிமையாகி அனைத்தையும் இழந்தார். அடுத்ததாக ராஜா ராணி படம் மூலம் மறுபடியும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் ஊர் சுற்றி வந்தார், இப்பொழுது ஒரு பேட்டியில் சுப்பிரமணியபுரத்தில் நான் நடிக்கவில்லை என்றால் மிகப் பெரிய ஹீரோவாக வலம் வந்து இருப்பேன்.

சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்கும்போது எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா இன்னும் எண்ணற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிக்காமல் போனதால் இன்று வரை சாதாரண ஹீரோவாக இருக்கிறேன். இவர் நன்றாக இருக்கும் பொழுது தன்னை ஒரு அஜித்தை போல நினைத்து படத்தின் ப்ரமோஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வது கிடையாது, இயக்குனர்களை மதிப்பது கிடையாது.

நன்றாக இருக்கும் பொழுது தலை கணம் மற்றும் யாரையும் மதிக்காமல் சுற்றி வந்த ஜெய். பின்னர் காதலினால் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அனைத்தையும் இழந்து இன்று ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இப்பொழுது இசை அமைத்துக் கொண்டும் அதில் அவரே நடித்துக் கொண்டும் வருகிறார், படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.

நல்ல கதாநாயகன் நன்றாக வர வேண்டிய நேரத்தில் தனது சுயஒழுக்கம் இல்லாததால் இன்று இவரை யாரும் கவனிக்காத நிலையில் இருந்து வருகிறார். இதற்கு காரணம் ஜெய் மட்டுமே வேறு யாரும் இல்லை என்று கூறி வருகிறது கோலிவுட் வட்டாரங்கள்.

- Advertisement -