மார்க்கெட் போனாலும் பரவாயில்லைனு ஜெய் நடிச்ச 5 தோல்வி படங்கள்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

Actor Jai: நடிகர் ஜெய் பல படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது மார்க்கெட்டில்லாமல் உள்ளார்.இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த சில தோல்வி படங்கள் தான். பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது, கண்டிப்பாக அப்படம் தோல்வியடையும் எனசில நடிகர்களுக்கு தெரிந்தால் அந்த படத்திலிருந்து விலகிவிடுவார்கள். ஆனால் ஜெய் இந்த விஷயத்தில் பயங்கரமாக சொதப்பி மார்க்கெட் போனாலும் பரவாயில்லை என 5 தோல்வி படங்கள் வீதம் நடித்துள்ளார்.

அவள் பெயர் தமிழரசி: 2010 ஆம் ஆண்டு இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான இப்படம் கிராமத்து காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படத்தில் நடிகர் ஜெய், நடிகை நந்தகி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இதில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்க்கு இப்படம் தோல்வியை தான் பெற்று தந்தது.

Also Read: ஜெய்யை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓரளவு இன்று வரை நிலைத்து நிற்க காரணம் அட்லீ

அதே நேரம் அதே இடம்: 2009 ஆம் ஆண்டு இயக்குனர் எம்.பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். பிரேம்ஜி இசையமைத்த இப்படத்தில் ஜெய், விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பர். ஜெய் இப்படத்தில் காதல் தோல்வியடையும் நிலையில் பழிவாங்கும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், இருந்தாலும் இப்படம் படுதோல்வியடைந்தது.

நவீன சரஸ்வதி சபதம்: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் கே.சந்துரு இயக்கத்தில் வெளியான இப்படம் சிவாஜி கனேசன் நடித்த சரஸ்வதி சபதம் திரைப்படம் பாணியில் இக்காலத்திற்கு ஏற்றார் போல் இயக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து விடிவி.கணேஷ், சத்யன், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில், நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இருந்தாலும் இப்படத்தின் கதைக்களம் ரசிகர்கள் மனதை கவராத நிலையில் இப்படமும் தோல்வியடைந்தது.

Also Read: ஜெய்யால் சரிந்த மார்க்கெட்.. காமெடி நடிகருக்கு ஜோடியான ஹீரோயின்

கேப்மாரி: 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படம் கணவன், மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கும். ஜெய்யுடன் இணைந்து நடிகைகளான வைபவ் சிந்தியா, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் ஜெய் இரட்டை கதாபாத்திரத்தில் வலம் வருவார். முழுக்க, முழுக்க அடல்ட் கதைக்களமாக வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நிலையில் இப்படமும் படுதோல்வி அடைந்தது.

குற்றமே குற்றம்: 2022 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் கொலை சம்மந்தப்பட்ட பல தரப்பட்ட கதைக்களத்தில் வெளியாகியிருக்கும். இப்படம் கடந்தாண்டு தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியாகாமல் நேராக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருக்கும். நடிகர் ஜெய், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஆக்ஷன், திரில்லராக அமைந்த நிலையில் ஜெய்க்கு செட்டாகாத கதாபாத்திரமாக பார்க்கப்பட்டது.

Also Read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்