தனுஷின் ஜகமே தந்திரம் பட ரிலீசை 2 மாதத்திற்கு தள்ளி வைத்த நெட்ப்ளிக்ஸ்.. நொந்துபோன படக்குழு!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு தொடர் வெற்றிகளை கொடுக்கும் நடிகராக வலம் வருபவர் தனுஷ். 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்துள்ளது.

ஆனால் கர்ணன் படத்திற்கு முன்னரே உருவான திரைப்படம் தான் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் 2020 ஆம் ஆண்டு மே 1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது.

ஆனால் கொரானா சூழ்நிலையில் ஜகமே தந்திரம் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என தனுஷ் ஒரு கட்டத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தயாரிப்பாளர் செய்த குளறுபடியால் அந்த படம் நேராக நெட்ப்ளிக்ஸ் என்ற ஓடிடி தளத்திற்கு சென்றது. படம் கைமாறி பல மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் இரண்டு மாதங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.

அந்த வகையில் ஜூன் 18ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது தனுஷின் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை போல ஜகமே தந்திரம் படமும் தியேட்டரில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என படக்குழு நொந்து போயுள்ளனர்.

jagamethandhiram-cinemapettai
jagamethandhiram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்