பிரதீப்புக்கு அடித்த சுக்கிர திசை.. LIC, டிராகன் படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனருடன் கூட்டணி

Pradeep New Movie Update: எடுத்த உடனே ஆகாயத்தில் பறக்க முடியாது என்று நினைத்த பிரதீப் சினிமாவிற்குள் நுழைவதற்கு எடுத்த அஸ்திவாரம் தான் இயக்குனர் அவதாரம். எடுத்த முதல் அவதாரமான கோமாளி பிரதீப்பை தூக்கி நிறுத்தி விட்டது. இதனால் ஏன் ஹீரோவாக முயற்சி பண்ணக்கூடாது என்று முடிவு பண்ணி இயக்கி எடுத்து அவரை நடித்த படம் தான் லவ் டுடே.

இதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரதீப்புக்கு ஜாக்பாட் அடித்து விட்டது. அதாவது 5 கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது. இந்த ஒரு அதீத வளர்ச்சி பிரதிப் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். அந்த அளவிற்கு பிரதீப் காட்டில் அடை மழை பொழிந்து விட்டது.

பிரதீப்புக்கு குவியும் வாய்ப்புகள்

இதனை அடுத்து சொல்லவா செய்ய வேண்டும் அவரை சுற்றி ஏகப்பட்ட இயக்குனர்கள் வலை வீச ஆரம்பித்து விட்டார்கள். அப்படி இவருக்கு கொக்கி போட்டவர் தான் விக்னேஷ் சிவன். இவருடைய இயக்கத்தில் பிரதீப் தற்போது LIC என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் சேர்ந்து எஸ்ஜே சூர்யா நடிப்பு அரக்கனாக வெளுத்து வாங்குகிறார்.

அத்துடன் கீர்த்தி செட்டி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த படத்திற்கான பிள்ளையார் சுழியும் போட்டு விட்டார். அதாவது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தின் பட பூஜை முடிந்த நிலையில் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்தில் துவங்க இருக்கிறது.

ஆனால் அதற்குள் இன்னொரு படத்திற்கும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சுதா கொங்காரா உதவி இயக்குனராக இருக்கும் கீர்த்தீஸ்வரன் இயக்கப் போகும் படத்தில் கமிட்டாய் இருக்கிறார். இதில் பிரதீப்புக்கு ஜோடியாக மமீதா பைஜூ கமிட்டாகி இருக்கிறார்.

இவர் பிரேமலு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். படத்தை மைத்ரி மூவி மேக்கர் தயாரிக்கப் போகிறது. மேலும் பிரதீப் லைனில் இருக்கும் LIC மற்றும் டிராகன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. இனி பிரதீப்புக்கு சுக்கிர திசை தான் என்று சொல்வதற்கு ஏற்ப நாளா பக்கமும் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்.

இளம் தலைமுறையை கவர்ந்த பிரதீப்பின் ஜாக்பாட்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -