22 வயதில் படுக்கைஅறை காட்சி உங்க வீட்ல எப்படி ஒத்துக்கிட்டாங்க? அசரவைக்கும் பதில் அளித்த இவானா

ஏற்கனவே தமிழில் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார் இவானா. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது அனைத்து சேனல்களுக்கும் இந்த ஜோடி பேட்டி அளித்து கொண்டிருக்கின்றனர். அதில் இவர்கள் படம் தொடர்பான பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Also read: நான்கே நாட்களில் போட்ட காசை டபுள் மடங்காக எடுத்த லவ் டுடே.. மொத்த வசூல் விவரம்

அதில் இவானா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது லவ் டுடே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு நெருக்கமான படுக்கையறை காட்சியில் எப்படி நடிப்பீர்கள் என்றும், உங்கள் அம்மா அப்பா அதற்கு என்ன ரியாக்ட் செய்தார்கள் என்றும் கேட்கப்பட்டது. இது கொஞ்சம் சங்கடமான கேள்விதான் என்றாலும் அதற்கு இவானா கொடுத்த பதில் தான் அசத்தலாக இருந்தது.

ஏனென்றால் வெறும் 22 வயதே ஆன அவர் துணிந்து அப்படி ஒரு காட்சியில் நடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியம்தான். அதற்கு பதில் அளித்த இவானா, நான் கதையைக் கேட்கும் போதே என் வீட்டில் இருப்பவர்களிடம் இதைப் பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். அத்துடன் என் நட்பு வட்டாரத்திலும் இது பற்றி தெரிவித்திருந்தேன்.

Also read: தவறான கண்ணோட்டத்தில் வெளிவந்த லவ் டுடே விமர்சனம்.. அதுக்கு செல்வராகவனை இழுத்து இருக்க வேண்டாம்

என் பெற்றோர் கதைக்கு தேவையான பட்சத்தில் இப்படி நடிப்பதில் தவறில்லை என்று புரிந்து கொண்டதால், அந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு சம்மதம் கொடுத்தார்கள். அதன் பிறகு தான் நான் அந்த காட்சியில் நடித்தேன். மேலும் அப்படி ஒரு காட்சியில் நடித்தது குறித்து இதுவரை யாரும் என்னை தவறாக விமர்சிக்கவே கிடையாது.

அது மட்டுமல்லாமல் அந்த காட்சியில் நடிப்பதற்கு முன் நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சி ரொம்பவும் கலகலப்பாகவே படமாக்கப்பட்டது. இதனால் அந்த காட்சியில் நடிக்கும் போது எனக்கு பயமோ, பதட்டமோ எதுவும் ஏற்படவில்லை. அது ஒரு நல்ல கருத்தை முன்னிறுத்தும் காட்சியாக தான் இருந்தது. ஒரு முக்கிய விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் எனக்கு மகிழ்ச்சி தான் என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Also read: லவ் டுடே ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் கொடுத்து லாக் செய்த சூர்யாவின் மாமா.. அடுத்தடுத்து பிசியாகும் பிரதீப்

- Advertisement -