சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

சமீபத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சினிமா விமர்சகர் ஒருவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும். அந்த வகையில் இப்போது உள்ள காலகட்டத்தில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பார் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால் ரஜினி துணிச்சலாக எடுத்த முடிவை சில சமயங்களில் விஜய் எடுக்க தவறி உள்ளார். அதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக தற்போது வரை உள்ளார். அதாவது பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது.

Also Read : தமிழில் பெரிய பட்ஜெட்டில் உருவான டாப் 5 படங்கள்.. பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாத ரஜினி

அதுவும் குறிப்பாக விஜய் படத்தை எடுத்துக் கொண்டால் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு படங்களில் ஹீரோயின்களை பேருக்காக பயன்படுத்தி இருந்தார்கள். மேலும் விஜய் எப்போதுமே கதாநாயகிக்கு முக்கியம் உள்ள படங்களில் நடிக்க மாட்டார் என்று சமீபத்தில் அவருடைய அப்பா இயக்குனர் எஸ்ஏசி கூறியிருந்தார்.

அதாவது நினைத்தேன் வந்தாய் படம் தெலுங்கில் வெளியான போது அந்த படத்தின் ரைட்சை எஸ்ஏசி வாங்கிவிட்டார். ஆனால் அந்த படத்தில் நடித்தால் ரம்பா மற்றும் தேவயானிக்கு தான் ஸ்கோப் இருக்கும் என்று விஜய் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அவருடைய தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து அந்த படத்தில் நடித்தாராம்.

Also Read : ரஜினி விரும்பாததை செய்யும் சன் பிக்சர்ஸ்.. சூப்பர் ஸ்டார் கேட்டதால் வந்த ஆபத்து

அதேபோல் தான் பிரியமானவளே படத்திலும் ஆரம்பத்தில் தயக்கம் காட்டி தான் விஜய் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விஜய்யின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அதன் பிறகு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதை விஜய் விரும்பவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். சந்திரமுகி படத்தில் அவருக்கு பெரிய அளவில் காட்சிகள், பெயர் இல்லை என்றாலும் ரஜினி அந்த படத்தில் நடித்து கொடுத்தார். மேலும் ஜோதிகாவுக்கு தான் அந்த படத்தில் மொத்த பாராட்டும் கிடைத்தது. இருந்தாலும் ஒரு மிகப்பெரிய ஸ்டார் அந்த படத்தில் நடித்தது பாராட்டுக்குரிய விஷயம்.

Also Read : ரஜினிக்கு நீண்ட நாட்களாக பாட்டில் பிரண்டாக கம்பெனி கொடுத்த நண்பர்.. தினமும் பார்க் ஹோட்டலில் அடிக்கும் லூட்டி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்