விஜய், அஜித் கதையின்னு கூட்டிட்டு வந்து கழுத்தறுத்த இயக்குனர்.. கடைசியில் சீரியலுக்கு கூட லாயக்கில்லாமல் போன பரிதாபம்

Vijay Ajith character: நடிகர்கள் பொருத்தவரை கொஞ்சம் பரிச்சயமானதும் எப்படியாவது அடுத்த கட்டமாக நம்முடைய முன்னேற்றத்தை காட்டி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பிரபலமாகி விட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். அப்படி தெலுங்கில் ஃபேமஸ் ஆன நடிகரை இயக்குனர் ஒருவர் நேரில் சந்தித்து தமிழில் படம் பண்ணுகிறேன்.

இந்த படத்தின் கதையே அஜித்தையும் விஜய்யும் மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறேன். ஆனால் அவர்கள் தற்போது பிஸியாக இருப்பதால் நடிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக நீங்கள் அஜித் கேரக்டரில் நடித்தால் உங்களுடைய வெற்றி நிச்சயமாக தமிழில் கொடி கட்டி பறக்கும் என்று கூறியிருக்கிறார்.

Also read: விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!

அப்படி இந்த இயக்குனர் கூறுவதை நம்பி தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் தமிழில் நடிப்பதற்கு சம்மதம் கொடுத்தார். அப்படி அவர் தமிழில் நடித்த படம் தான் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜா கூட்டம். இதில் ஸ்ரீகாந்தின் நண்பராக நடித்த ஜெய் ஆகாஷை தான் அஜித் கேரக்டருக்கு நடிப்பதற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். இவர் பூமிகாவின் காதலனாக நடித்திருப்பார்.

இயக்குனர் சொன்னதை நம்பி நடிக்க வந்தவருக்கு கடைசியில் ஏமாற்றமாக அந்த கேரக்டர் அமைந்துவிட்டது. ஜெய் ஆகாஷ் நினைத்ததோ நமக்கு ஒரு பெரிய கேரக்டர் இருக்கும் என்றுதான் ஆனால் நடிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு சின்ன கதாபாத்திரம். இதனால் ரொம்பவே ஏமாந்து போய் வருத்தப்பட்டு இருக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயன் தலைமறைவுக்கு இதுதான் பின்னணியா.? அஜித்தை பார்த்து இப்படியா அட்டகாப்பி அடிப்பது

அத்துடன் இதே மாதிரி நிறைய இயக்குனர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாக தான் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனால் இவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவி போய்விட்டது. அடுத்ததாக சீரியலில் நடித்தாவது பிரபலமாகலாம் என்று ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதான் என் பொன்வசந்தம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் நினைத்த மாதிரி இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதுவும் சில காரணங்களால் பாதிலேயே முடிவடைந்து விட்டது. தற்போது வேறு எந்த சீரியல்களிலும் நடிக்காமல் எங்கே போய்விட்டார் என்று தேடும்படியாக பரிதாபமாக இவருடைய நிலைமை ஆகிவிட்டது.

Also read: வழுக்கை தலையன் என அசிங்கப்படுத்தப்பட்ட நடிகர்.. அஜித், ஷாலினி போல் இணைந்த ஜோடி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை