இதுவரைக்கும் ரஜினி பேசாத ஒரே மொழி.. இப்ப வரைக்கும் முயற்சி பண்ணல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். இவர் கிட்டதட்ட 169 படங்கள் நடித்துள்ளார். அதேபோல் பல மொழி படங்களிலும் ரஜினி நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்தில் கூட ரஜினி நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிக மொழிகள் தெரிந்த நடிகர் கமலஹாசன் தான்.

அவர் பல மொழிகளை சரளமாக, பேசவும் எழுதவும் தெரிந்தவர். மேலும் நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் கமலுக்கு உள்ளதால் மற்ற மொழிகளை தெரிந்து கொள்ள ஆர்வமும் அவருக்கு இருந்தது. ஆனால் ரஜினிக்கு பல மொழிகள் பேச தெரிந்தாலும் ஒரு மொழியை தற்போது வரை அவர் கற்றுக் கொள்ளவில்லையாம்.

Also Read :சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்

அதாவது ரஜினியின் பூர்வீகம் கர்நாடகா என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவுக்கு வந்த புதிதில் ரஜினி தமிழ் பேசவே மிகுந்த சிரமப்பட்டுள்ளார். இதனால் பலரிடமும் திட்டு வாங்கியுள்ளாராம். ஒரு நாள் பாஷையும் புரிய மாட்டேங்குது, நடிப்பும் வரல என சினிமாவை விட்டு போகவும் ரஜினி நினைத்துள்ளார்.

அதன் பின்பு சிலர் சமாதானப்படுத்தியதால் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் காலப்போக்கில் ரஜினி தமிழை சரளமாக பேச கற்றுக் கொண்டார். ரஜினி பெங்களூரில் இருந்ததால் அங்கு எல்லா மொழி பேசுபவர்களும் கலந்து தான் இருப்பார்கள்.

Also Read :கௌரவ குறைச்சலால் அதிரடியாக இறங்கிய ரஜினி.. ஆடிப்போன லைக்கா!

அதாவது தமிழ், ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் அங்கு இருப்பதால் சுலபமாக இந்த மொழிகளை கற்றுக் கொள்ளலாம். அதிகமாக பெங்களூரில் கன்னடா மொழி தான் பேசுவார்கள். இதனால் அந்த சமயத்திலேயே ரஜினிக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகள் ஓரளவு தெரிந்தது.

ஆனால் தற்போது வரை ரஜினிக்கு மலையாள மொழி தெரியாதாம். அதை கற்றுக் கொள்ளவும் இன்று வரை அவர் முயற்சி செய்ததில்லை. ஏனென்றால் பெங்களூரில் யாரும் அதிகமாக மலையாளம் பேசும் மக்கள் அப்போது இல்லையாம். இதனால் இந்த மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வமும், வாய்ப்பும் ரஜினிக்கு வரவில்லையாம்.

Also Read :காலா, கோச்சடையான் படங்களால் வந்த வினை.. டாட்டா போட்டு தலைதெறிக்க ஓடும் ரஜினி

- Advertisement -