10 வருடங்களாக காத்திருந்த ஏஆர் முருகதாஸ்.. விஜய் போல் அஜித்தும் கைவிட்ட பரிதாபம்

AR Murugadoss : அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஏஆர் முருகதாஸ். சமூகத்திற்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தை தனது படங்கள் மூலம் முருகதாஸ் கூறி வந்தார். இதைத்தொடர்ந்து அஜித்தின் துப்பாக்கி படம் இயக்கிய நிலையில் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.

அதன்படி அடுத்ததாக கத்தி, சர்கார் என விஜய்யின் படங்களை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். மேலும் விஜய்யின் 62 ஆவது படத்தை இவர் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்காருக்கு பிறகு விஜய் ஏஆர் முருகதாஸ் கூட்டணி தற்போது வரை இல்லாமல் போய்விட்டது.

இதற்கு காரணம் ஏஆர் முருகதாஸ் கதை திருட்டு போன்ற சில சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் விஜய் அவருக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி வைத்து விட்டார். அதேபோல் தீனா படத்திற்கு பிறகு ஏஆர் முருகதாஸ் அஜித்க்காக ஒரு கதை எழுதி உள்ளார்.

10 வருடம் காத்திருந்த ஏஆர் முருகதாஸ்

சில காரணங்களினால் அந்த படத்தில் அஜித் நடிக்காத நிலையில் அதன் பிறகு சூர்யா நடித்து ஹிட் கொடுத்த படம் தான் கஜினி. அதேபோல் ரெட்ட தல என்ற டைட்டில் உடன் அஜித்துக்கு மற்றொரு கதையையும் ஏ ஆர் முருகதாஸ் எழுதி இருக்கிறார்.

மேலும் இந்த படம் டேக் ஆஃப் ஆகாத நிலையில் டைட்டில் மட்டும் ஏ ஆர் முருகதாஸ் இடம் இருந்து. 10 வருடங்களாக காத்திருந்த நிலையில் இப்போது ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திற்கு ரெட்ட தல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இடம் இந்த டைட்டிலை கேட்கும் போது அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாகவே கொடுத்து விட்டாராம். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்