வாழ்க்கை ஒரு வட்டம்டா.. 8 வருடம் கழித்து விஜய் காலில் விழுந்த லவ் டுடே இயக்குனர்

இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தற்போது திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் உரிமையாளர்கள் லவ் டுடே படத்திற்கு அதிகப்படியான திரையரங்குகளை ஒதுக்கி உள்ளனர்.

மேலும் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்றே நாளில் போட்ட பணத்தை எடுத்துள்ளது. இனி வசூல் செய்யும் எல்லாமே லாபம் தான். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரதீப் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயை கேலி செய்யும் விதமாக சில பதிவுகளைப் போட்டிருந்தார்.

Also Read : சைலன்ட் ஆக வந்து அசுர வசூல் வேட்டையாடும் லவ் டுடே.. 3வது நாளில் இத்தனை கோடி வசூலா!

அதாவது ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் விஜயின் கத்தி படத்திற்கு மிக எளிதாக டிக்கெட்களை பெற முடிகிறது என கேலி செய்திருந்தார். இதற்கு ஒருபடி மேலாக ஜில்லா படத்தின் டப்பிங் சுறா படத்தின் டப்பிங்கை விட மோசமாக உள்ளதாக விமர்சித்திருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை தனது படத்திற்கு பிரதீப் வைத்துள்ளார். மேலும் இந்த டைட்டிலை பயன்படுத்திக் கொண்டதற்காக விஜய்க்கு நன்றியும் அவர் கூறியிருந்தார்.

Also Read : ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

இப்போது லவ் டுடே படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் பிரஸ்மேட்டில் அடுத்ததாக விஜய்க்கு ஒரு கதை சொல்லி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பதிலை கூடிய விரைவில் அறிவிப்பதாக பிரதீப் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது கொந்தளித்து உள்ளனர். அதாவது 8 வருடத்திற்கு முன்பு பிரதீப் விஜயை கேலி செய்த பதிவை இப்போது எடுத்து, வாழ்க்கை ஒரு வட்டம்டா, ஒரு காலத்தில் எங்க தளபதியை கேலி செய்து இப்போது அவர் காலில் வந்து விழும் நிலைமை வந்துள்ளது, பார்த்து நடந்துக்கோ என கிண்டல் அடித்த வருகிறார்கள்.

Also Read : விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட பிரபலம்.. நாசுக்காக ரிஜெக்ட் செய்த தளபதி