குணசேகரனுக்கு முடிவு கட்ட ஜீவானந்தத்தை தேடி போகும் ஈஸ்வரி.. அந்தர்பல்டி அடிக்கப் போகும் தர்ஷினி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களையும் அடாவடியாக செய்து வருகிறார். ஆனால் இவர் செய்வதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அந்த வீட்டுக்கு வாழ வந்த நான்கு மருமகளும் ஒவ்வொரு விஷயத்திலும் போராடி வருகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய போராட்டம் வெறும் வாய் சவடலாக தான் முடிகிறதே தவிர, எந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு வெற்றி பெற்றதாக இல்லை. அந்த வகையில் ஆதிரை கல்யாண முதற்கொண்டு எல்லா விஷயத்தையும் தோற்றுப் போய் வருகிறார்கள்.

இதுல குணசேகரன் இப்பொழுது தர்ஷினியை உமையாவின் மகள் சித்தாரத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருக்கிறார். அதே மாதிரி உமையாவும் குணசேகரின் மகள் தான் என் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார்.

இதனை பார்த்த சித்தார்த் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். யார் அவர்கள், குணசேகரனை விட பெரிய பணக்காரர்களா என்று கேட்கிறார்கள். அப்பொழுது ஜனனி சக்தி மற்றும் அஞ்சனா, சித்தார்த் வீட்டிற்குள் வருகிறார்கள்.

வந்ததும் நானும் சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்று அஞ்சனா சொல்கிறார். ஆனால் வாயைத் திறந்து எதுவுமே பேசாமல் சித்தார்த் அமைதியாக இருக்கிறார். இவருடைய அமைதிக்கு பின் என்ன முடிவு இருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் வழக்கம்போல் ஜனனி இவர்களுடைய கல்யாணம் நிச்சயமாக நடக்கும் என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு திரும்பி விடுகிறார். இதனை அடுத்து ஜனனி, குணசேகரனிடமும் என் தங்கச்சி அஞ்சனாவும் உமையாவின் மகன் சித்தார்த்தம் தான் காதலிக்கிறார்கள்.

அதனால் தேவை இல்லாமல் இதில் குளறுபடி பண்ண வேண்டாம். அவர்களுடைய கல்யாணத்தை யார் தடுத்தாலும் நான் பண்ணி வைப்பேன் என்று சவால் விடுகிறார். இதனை தொடர்ந்து தர்ஷினியை சரிப்படுத்த வேண்டும் என்றால் ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் முடியும் என்று ஈஸ்வரி நினைக்கிறார்.

அந்தர்பல்டி அடிக்கப் போகும் தர்ஷினி

அதனால் எப்படியாவது ஜீவானந்தத்தை தேடி பிடித்து நான் கூட்டிட்டு வருகிறேன் என்று ஈஸ்வரி போகப் போகிறார். இதற்கு இடையில் தர்ஷினி எல்லா விஷயங்களையும் மறந்து போன நிலையில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று குணசேகரன் முடிவெடுக்கிறார்.

மேலும் தர்ஷினி எப்ப பார்த்தாலும் அப்பா, அப்பா என்று புலம்புவதால் அனைவரும் குணசேகரன் தான் நல்லவர் என்பது போல் நினைக்கிறார்கள். அதே மாதிரி தர்ஷினி இப்படி சொல்லிக் கொண்டே இருப்பதால் ஜீவானந்தத்திற்கும், ஈஸ்வரிக்கும் எதிராக கேஸ் திசை திருப்ப போகிறது.

ஆனால் அந்த நேரத்தில் தர்ஷினி வாயைத் திறந்து ஜீவானந்தம் தான் அப்பா என்று சொல்லி குணசேகரன் மூஞ்சியில் கரையை பூசும் அளவிற்கு அந்தர்பல்டி அடிக்க போகிறார். ஆனாலும் கடைசி வரை குணசேகரன் இந்த விஷயத்தில் மாற்றுவதாக தெரியவில்லை.

Next Story

- Advertisement -