குட்டி அருந்ததி ஜக்கம்மாவாக மிரட்டிய திவ்யாவா இது.? இப்போ நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் புகைப்படம்

Arunthathi: சினிமாவில் ஏகப்பட்ட கேரக்டர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அதில் சில கதாபாத்திரங்கள் மட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் மறக்கவே முடியாத அளவிற்கு தரமான சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கும். அப்படித்தான் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த படத்தை யாராலயும் மறக்க முடியாது.

முக்கியமாக அனுஷ்கா அருந்ததி கேரக்டரில் எந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்து இருந்தாரோ, அதே மாதிரி குட்டி அருந்ததி கேரக்டரில் ஜக்கம்மாகவாக மிரட்டிய நடிகை திவ்யாவையும் ஈசியாக யாராலும் மறக்க முடியாது. அந்த சின்ன வயதிலேயே துடுப்பான பேச்சும், கம்பீரமான நடையும், காந்த பார்வையும் அனைவரையும் மிரள வைத்தது.

அப்படிப்பட்ட குட்டி அருந்ததி தற்போது நெடுநெடுன்னு வளர்ந்து நிற்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. அதாவது இவருடைய உண்மையான பெயர் திவ்யா நாகேஷ். மும்பையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

kutty aunthathi
kutty aunthathi

Also read: தலைகனத்துடன் நடித்த ஹார்ட் ஜிலேபி.. அனுஷ்காவை காணாமல் போக வைத்த 5 படங்கள்

இப்படத்தில் இவருடைய நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரக்கான நந்தி விருதையும் பெற்றார். ஆனால் இதற்கு முன்னதாக அந்நியன், அது ஒரு கனாக்காலம், ஜில்லுனு ஒரு காதல், பொய் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதன் பின் நாயகியாகவும் பிற மொழிகளில் ஆறு படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் குழந்தையாக நடிக்கும் பொழுது கிடைத்த வரவேற்பு கதையின் நாயகியாக நடித்திருக்கும் பொழுது கிடைக்காமல் போய்விட்டது. அதனாலேயே சினிமா செட்டாகவில்லை என்று மொத்தமாக விலகி விட்டார். தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் அந்நியன் மற்றும் அருந்ததி படத்தில் சின்ன குழந்தையாக நடிக்கும் பொழுது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.

அத்துடன் அந்த இன்டர்வியூல் அவரை பார்க்கும் பொழுது ஹீரோயினுக்கு தேவையான அத்தனை அம்சங்களுமே இருக்கிறது. இருந்தாலும் தற்போது போட்டி நிறைந்த திரையுலகில் இவரால் தாக்குப் பிடிக்காமல் போய்விட்டார். இவருக்கு இப்பொழுது 31 வயது ஆகிய நிலையில் சினிமாவும் கை கொடுக்காத நிலையில் திருமண பந்தத்தில் இணைய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 17 படங்கள்.. மிஸ் ஷெட்டியாக கம்பேக் கொடுத்த அனுஷ்கா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்