ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?. கேரியரை கண்டமாக்கிய கணவர்

Lady Superstar Nayanthara Movie Update: கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த நவம்பர் 18ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு விக்னேஷ் சிவன் 4 கோடி விலை உயர்ந்த காரை பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார். இப்படி எல்லாம் செய்யும் விக்னேஷ் சிவன் எதற்கு நயன்தாராவின் சினிமா கேரியரை கண்டம் ஆக்குகிறார் என ரசிகர்கள் இப்போது கொந்தளிக்கின்றனர்.

ஏனென்றால் விக்னேஷ் சிவனின் புதிய படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் இப்போது அந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளது. இந்த படத்தில் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக நடிக்க வைக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்ஜே சூர்யா, மிஸ்கின், யோகி பாபு போன்றவர்களும் இணைந்து நடிக்கின்றனர். ஆனால் இப்போது ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also read: 75வது படத்தில் அன்னபூரணியாக ஜெயித்தாரா நயன்தாரா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஹீரோயினுக்கு அக்காவாகும் நயன்தாரா 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 60 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எல்ஐசி (LIC)- லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Company) என டைட்டில் வைத்திருக்கின்றனர். இந்த படம் காதலை பின்னணியாக வைத்து ரொமான்ஸ் ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்ட நிலையில், இந்த மாதம் ஷூட்டிங் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆனால் ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனின் கையை விட்டு போன பிறகு எல்ஐசி படத்தில் தன்னுடைய கணவரை தூக்கி நிறுத்த வேண்டும் என நயன்தாரா நினைக்கினார். ஆனால் இந்த முடிவால் நயன்தாராவின் சினிமா கேரியரே கேள்விக்குறிவாக்கி விடுமே என்பதுதான் ரசிகர்களின் பதட்டம். அதேசமயம் நயன்தாரா நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆன அன்னபூரணி படம் திரையரங்கில் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

Also read: Annapoorani Movie Review- உணவின் காதலி நயன்தாராவின் விருந்து அறுசுவையா, அறுவையா.? அன்னபூரணி எப்படி இருக்கு?முழு விமர்சனம்