சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

6 வருட கடும் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக சிவகார்த்திகேயன் படத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது. தற்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக கலெக்சனை அள்ளி வரும் இவர் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து அயலான் திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸ் ஆகாமல் தவித்து வந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்த தயாரிப்பாளர் தீபாவளிக்கு எப்படியும் கல்லா கட்டியே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயன் ஜிம் பாட்னர் யார் தெரியுமா?. சந்தானம் பட நடிகை வெளியிட்ட வைரல் போட்டோ

ஆனால் அதில் தான் இப்போது ஒரு புது சிக்கல் முளைத்து இருக்கிறது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் பிசினஸ் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தை சன் டிவி சில கோடி தொகையை கொடுத்து வாங்கி இருக்கிறது. அதேபோன்று ஓடிடி பிசினஸும் சுமாராக இருந்திருக்கிறது.

ஏனென்றால் இப்போது ஓடிடி தளங்களுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அந்த கலாச்சாரம் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதனாலேயே அயலான் திரைப்படத்திற்கான பிசினஸும் கணிசமாகவே இருந்திருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் எடுக்க எவ்வளவு நாளாச்சு தெரியுமா?. ப்ரோமோஷனலில் போட்டு உடைத்த வந்தியத்தேவன்

இன்றைய தேதியை வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் மீண்டும் அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு லாபகரமான தொகையை பெறவும் தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறாராம். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வேறு ஒரு கவலை புதிதாக துளிர்விட்டு இருக்கிறதாம்.

அதாவது இந்த வருட தீபாவளிக்கு கேப்டன் மில்லர், ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த இரு படங்களுக்குமே எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே ஆறு வருட தாமதத்திற்கு பிறகு வெளியாகும் அயலான் படம் இவர்களுடன் போட்டியிட்டு வசூலை அள்ளுமா என்ற கவலையில் அவர் இருக்கிறாராம். தற்போது படமும் நஷ்ட கணக்கில் ரிலீஸ் ஆக இருப்பதால் இதை எப்படி சரி கட்டுவது என்ற ஆலோசனையில் பட குழுவினர் இருக்கின்றனர்.

Also read: சிவகார்த்திகேயன், தனுஷை பதம் பார்க்க தீபாவளிக்கு களமிறங்கும் விரல் நடிகர்.. பக்கபலமாக நிற்கும் கமல்

- Advertisement -