ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இவ்ளோ பிரமாண்டமா? பாலிவுட் பிரபலத்தையே மிரள வைத்த கங்குவா.. 2000 கோடி வசூல் உறுதி

சூர்யாவின் கங்குவா இப்படத்தைப் பார்த்த பாலிவுட் பிரபலம் ஒருவர் வெகுவாகப் பாராட்டியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் – ஞானவேல்ராஜா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், நட்டி, திஷா பாட்னி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்தது. இப்படத்தின் ஒரு பாடல், டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி சமூக வலைதளத்தை அதிர வைத்தன. தமிழில் பாகுபலி மாதிரி ஒரு பிரமாண்ட படைப்பு என ரசிகர்களும் கொண்டாடினர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஸ் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து மீடியாக்கள், யூடியூப்களிலும் கங்குவா படக்குழு தலைகாட்டி, இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் கூறி வருகின்றனர்.

கங்குவா படம் மற்ற படங்களைக் காட்டிலும் வித்தியாசமானது, தனித்துவமானது என்பதால் இதை பான் இந்தியா படமாகவும் இருப்பதால் பல மாநிலங்களிலும், இந்தியாவைத் தாண்டி பல நாடுகளிலும் இப்படத்தை புரமோசன் செய்ய படக்குழு களமிறங்கியுள்ளனர். இதற்கிடையே கங்குவா படத்திற்கு ரூ.1000 என்பதைத் தாண்டி, ரூ.2000 கோடி வசூல் குவிக்கும் என்று கூறியிருந்தார் ஞானவேல் ராஜா. அதற்கு ரசிகர்கள் இப்படம் உண்மையில் ரூ.2000 கோடி வசூலிக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கங்குவாவை பாராட்டிய கோலிவுட் பிரபலம்

ஆனால் நல்ல கதையம்சம் உள்ள படங்களை எது எத்தனை கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் அதை கொண்டாட ரசிகர்கள் தயங்குவதில்லை. இந்த நிலையில், ஏற்கனவே கங்குவா படத்தைப் பார்த்த பிரபலங்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, பாடலாசிரியர் விவேகா, ’’இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சார் நடிப்பில் உச்சம் ’’என்று தெரிவித்திருந்தார்.

பாலிவுட் பிரபல இயக்குனர் வியந்து பாராட்டு

இந்த நிலையில் பாலிவுட் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் கங்குவா படத்தின் சில நிமிட காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு ’’ சூர்யா, பாபி தியோல் நடிப்பை படத்தில் வியந்து பார்த்து, படம் அற்புதமாக வந்திருப்பதாக கூறி, படக்குழுவினரையும் இயக்குனரையும் பாராட்டியதுடன் இப்படம் பற்றிய தனது விமர்சனத்தையும்’’ தெரிவித்து இருக்கிறாராம்.

இது கங்குவா படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவின் அடையாளமானவும் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களின் பேவரெட் இயக்குனராக இருக்கும் கரண் ஹோகர் சூர்யாவின் கங்குவா படத்தைப் பார்த்துவிட்டு, பாசிட்டிவி ரிவியூ கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளத

அதேசமயம், பாலிவுட் சினிமாவில் சில ஆண்டுகளாக பதான், ஜவான் ஆகிய படங்களைத் தாண்டி எந்தப் படமும் சரியாகப் போகவில்லை. தற்போது முன்னணி வசூலிலும் தெலுங்கு சினிமாவும், தமிழ் சினிமாவும் தான் இருப்பதால் கோலிவுட் புகழ் இனி பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டை கூட அதிரவைக்கலாம் எனவும் அந்தளவுக்கு பல திறமையான கலைஞர்கள் கோல்வுட்டில் உண்டு என்பதற்கு அடையாளமான சூர்யா- சிவாவின் கூட்டணியில் கங்குவா படம் உருவாகியுள்ளது என சினிமா விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News