ரஹ்மான் கதைதான் 99 சாங்க்ஸ் படமா? அப்பனா இளையராஜாதான் அந்த..

ஏ ஆர் ரகுமான் பல வருடங்களாக சினிமா உலகில் இருந்தாலும் தற்போதுதான் முதல் முறையாக தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு 99 என பெயர் வைத்துள்ளார்.

இசை கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா, அனிருத், சிவகார்த்திகேயன் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ஒரு இசைக் கலைஞரின் வாழ்க்கை என்று சொல்லும்போதே அந்தப்படம் ஒருவேளை ரகுமானின் வாழ்க்கை வரலாறாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அதுதான் உண்மையும் கூட என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

தமிழ் சினிமா உலகில் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் பஞ்சாயத்து அனைவருக்குமே தெரிந்ததுதான். குருவாக இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் வளர்ந்து விடக்கூடாது என இளையராஜா பல வேலைகளை செய்ததாக பல பத்திரிகைகளில் தற்போது வரை எழுதி வருகின்றனர்.

இது குறித்து இளையராஜாவோ அல்லது ஏஆர் ரகுமானோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே ரகுமான் வளர்ச்சியில் இளையராஜாவுக்கு காண்டுதான் என்ற கதை உண்மை என பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு ஏன் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த இசை படம் கூட இவர்களது கதைதான் எனவும், இதன் காரணமாகவே அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க மாட்டேன் என கூறி விட்டதாகவும் செய்திகள் உள்ளது.

இதுவே 99 சாங்க்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஒருவேளை ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கை வரலாறாக இருந்தால் கண்டிப்பாக மீண்டும் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் வாழ்க்கையில் பல புயல்கள் வீச ஆரம்பிக்குமாம்.

ilayaraja-ar-rahman-cinemapettai
ilayaraja-ar-rahman-cinemapettai
- Advertisement -