வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ருத்ரன் பார்ட் 2 வேறயா?. முடியல சாமி என பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தை வச்சி செய்திருந்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிறைய படங்கள் வெளியாகி இருந்தது.

அதில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தை பங்கமாக கலாய்த்து விமர்சனம் செய்துள்ளார் மாறன். அதாவது படத்தின் கதை என்னவென்றால் வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கும் இளைஞர்களின் பெற்றோர்களை கொன்று அவர்களிடம் சொத்துக்களை அபகரிப்பது தான் ருத்ரன்.

Also read: சைலன்டா சம்பளத்தை உயர்த்திய லாரன்ஸ்.. ருத்ரன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

மேலும் ருத்ரன் படத்தின் ஆரம்பத்திலிருந்து நிறைய சொதப்பல்கள் இருப்பதாக மாறன் கூறியிருந்தார். மேலும் படத்தில் இரண்டு பாடல்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. தெலுங்கு நடிகர் பாலையாவின் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் போல இப்படத்தில் எடுத்திருந்தார்கள்.

இதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கினாரா என்பதே தெரியவில்லை. மேலும் லாரன்ஸுக்கு பேய் படமாக இருந்தால் தான் ஓடும் என்று யாரோ சொல்லி இருப்பார்கள் போல. கடைசியில் பேய் பிடித்தவர் போல காந்தாரா படத்தில் இடம் பெற்ற சண்டைக்கு காட்சிகளில் தும்சம் செய்கிறார். ட்ரைலரை பார்க்கும் போதே இந்த படம் எப்படி இருக்கும் என்பது தெரிந்தது.

Also read: ராகவா லாரன்ஸின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? அப்பாவை போல பிள்ளை என்று சும்மாவா சொல்றாங்க!

மேலும் ருத்ரன் படம் ரசிகர்களை முட்டாள் ஆக்கியுள்ளது. கடைசியாக விடுதலை படத்தில் இரண்டாம் பாகம் வருவதற்கான லீட் வைத்திருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் விடுதலை 2 எப்போதும் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ருத்ரன் படம் முடியும்போது இரண்டாம் பாகம் வருவது போல லீட் வைத்திருக்கிறார்கள்.

அதை பார்த்த உடனே பக் என்ற ஆகிவிட்டது. முதல் பாகமே பார்க்க முடியவில்லை இதில் இரண்டாவது பாகமா முடியல சாமி என எவ்வளவு முடியுமோ அவ்வளவு வச்சு செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். மேலும் இவர் சொன்னதுக்கு ரசிகர்களும் படம் மொக்கையாக தான் இருந்ததாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: ஸ்டைலிஷ் ராகவா லாரன்ஸ், ஹோம்லி பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் ருத்ரன் பட புகைப்படங்கள்

- Advertisement -

Trending News