தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் கதை இதுவா? வேணும்னே வம்பு பண்றாங்களோ!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கர்ணன் திரைப்படம் ஏற்கனவே ஒரு சமூகத்தினரை பற்றி பேசுகிற படம் என்பது போன்று சித்தரிக்கப்பட்டதால் பல பிரச்சனைகள் எழுந்தது.

இருந்தாலும் படம் அதையெல்லாம் மீறி பல கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், கர்ணன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தபோதே அதை தனுஷ் முடிவு செய்துவிட்டார் எனவும் செய்திகள் வந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில் தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. ஆனால் இந்த படம் புது விதமான கதை இல்லாமல், கர்ணன் படத்தின் தொடர்ச்சியாக கர்ணன் 2 உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கர்ணன் படத்திற்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ணன் 2 என்றால் கண்டிப்பாக சமூகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என கோலிவுட்டே அச்சப்படுகிறதாம்.

அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் தொடர்ந்து வன்முறைகளை தூண்டி கொண்டிருக்கிறார் என அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கர்ணன் 2 வா, அல்லது வேறு படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆக மொத்தத்தில் பஞ்சாயத்து வருவது மட்டும் உறுதி.

karnan-dhanush-cinemapettaikarnan-dhanush-cinemapettai
karnan-dhanush-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்