ஐபிஎல் 2021 கால அட்டவணை அறிவிப்பு.. CSK ரசிகர்களுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

சினிமா துறையை தாண்டி அதிக ரசிகர்களை வைத்திருக்கக்கூடிய விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான். அந்த அளவிற்கு உலக அளவில் பல ரசிகர்களை வைத்துள்ளது கிரிக்கெட் வாரியம்.

கொரோனா அச்சத்தின் காரணமாக  சில காலங்கள் கிரிக்கெட் மைதானம் அமைதியாக காணப்பட்டது. ஆனால் சமீபத்தில் டெஸ்ட் போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே மைதானத்தில் உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர்.

நேற்று கூட இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா டெஸ்ட் போட்டியில் வென்று பல ரசிகர்களிடமும் பாராட்டும், வாழ்த்தும் வாங்கியது. சமீபகாலமாக பல ரசிகர்கள் எப்போது ஐபிஎல் போட்டி தொடரும் என எதிர்பார்த்து வந்தனர்.

ipl-2021
ipl-2021

தற்போது ஐபிஎல் போட்டி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஐபிஎல் போட்டிக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது ஐபிஎல் வாரியம். இதில் முதல் போட்டியே சென்னையில் தான் நடைபெற உள்ளது.

முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும்  ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. அடுத்ததாக பல ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்  அணியுடன் மோத உள்ளன.

ஐபிஎல் போட்டியின் கால அட்டவணைஅறிவித்தது இதனால் பல ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள்  சற்று சோகத்தில் உள்ளனர். ஏனென்றால்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஒரு போட்டியிலும் சென்னையில் விளையாடவில்லை.

இம்முறை அணைத்து டீம்களும் தங்கள் பிரான்சைஸ் சார்பற்ற, நடுநிலை மைதானங்களில் தான் விளையாடுமாம். அகமதாபாத், சென்னை, மும்பை, பெங்களுரு, கொல்கத்தா மற்றும் டெல்லி என்ற ஆறு ஊர்களில் தான் நடக்குமாம். பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்குமாம்.

ஐபிஎல் போட்டியின் கால அட்டவணை அறிவித்ததில் இருந்து பல ரசிகர்களும் எந்த அணி வெற்றி பெறும் என ஆவலாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்த அணி விளையாடுவதை பார்ப்பதற்காகவும் பல ரசிகர்கள்  காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.