இந்த ஆண்டு ஐபிஎல் திட்டமிட்டபடி முடித்து விடலாமா.? பெரும் குழப்பத்தில் கங்குலி!

கோலாகலமாக தொடங்கவிருக்கும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வருகிற 9ஆம் தேதியிலிருந்து மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 6 இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து இடங்களிலும் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என முன்னணி வீரர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வேகம் எடுத்தது போலவே இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே தொடக்க நிகழ்ச்சிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Ganguly-Cinemapettai.jpg
Ganguly-Cinemapettai.jpg

இவ்வாறு அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கையாக செய்துவரும் நிலையில் சில சிக்கல்கள் உருவாகி உள்ளது. வீரர்களைத் தவிர மைதான ஊழியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், அணியின் வீரர்களுக்கு உதவுபவர்கள் போன்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிகிறது.

இது வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் போட்டி நடத்தும் தலைமை மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ முன்னெச்சரிக்கையுடன் போட்டியை நடத்தியே தீரவேண்டும் என தாதா கங்குலி தீர்மானமாக உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்