மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள்.. 2,000 கோடியில் களமிறங்க உள்ள 2 புதிய அணி.!

ஐபிஎல்-2021 போட்டிகள் நடந்து கொண்டிருக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவியதால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் இம்மாதம் செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

தற்போது போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நடக்க உள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது..

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 2 புதிய அணிகள் விளையாட இருக்கின்றன. ஆகையால் 10 அணிகள் பங்குபெறும் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகின்றது. இந்த புதிய அணிகளுக்கான ஏலத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஒரு அணியை ஏலத்தில் எடுக்க குறைந்தபட்சம் 2,000 கோடியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்பு பிசிசிஐ போர்டுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

Mi-Csk-Cinemapettai.jpg
Mi-Csk-Cinemapettai.jpg

கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. அதன் பின்னர் பல சிக்கல்கள் காரணமாக 9 அணிகளாக குறைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் மீண்டும் எட்டு அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பத்து அணிகள் கொண்ட தொடர் வருவதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்