ஐபிஎல் விக்கெட் கீப்பர்கள் கொடுத்த ஸ்டிராங் மெஸேஜ்.. தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் தல தோனி!

2021 ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட  4 போட்டிகள்  முடிந்துள்ள நிலையில்,  3 போட்டிகள் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்தது.

நடந்து முடிந்த கொல்கத்தா, ஹைதராபாத் போட்டிகளும், நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் கடைசி ஓவர் வரை சென்று திரில்லாக முடிந்தது.

இந்த ஐபிஎல் தொடர்  விக்கெட் கீப்பர்கள் சீசன் ஆக மாறியுள்ளது. அனைத்து போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கே எல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸ் வெளுத்து வாங்கினார். அதேபோல் ஹைதராபாத் கொல்கத்தா போட்டியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினார்கள்.

டெல்லி அணியிலும் ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு அபாரமாக விளையாடினார். தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் மோசமான பார்மில் இருப்பது சிஎஸ்கே அணியில் தோனி தான். கடந்த சீசனிலும் தோனி சரியாக விளையாடவில்லை.

டெல்லிக்கு எதிரான போட்டியிலும் கூட தோனி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் சிஎஸ்கேவைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Dhoni1-Cinemapettai.jpg
Dhoni1-Cinemapettai.jpg