15 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. அடேங்கப்பா, 75 படங்கள் நடித்து இருக்காங்களா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் கம்பம் மீனா. இவருடைய பலம் என்னவென்றால் வட்டார மொழி பேசுவதன் மூலம் தனித்துவமான நடிகையாக விளங்குகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய ரசிகர்களுடன் அதிக நேரம் செலவிடும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையின் பின்னணியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தனது 15வது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பின், வாழ்க்கை என்ன என்பதை புரிந்து கொள்வதற்குள்ளே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாராம். அதன் பின் மீனா தன்னுடைய கணவருக்கு உதவும் வகையில் எல்ஐசி ஏஜென்ட் ஆக வேலை செய்தாராம்.

பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு என்ற சீரியல் தேனியில் நடைபெற்ற போது அந்த சீரியலில் நடிப்பதற்கு கம்பம் மீனாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தொடர்ந்து வரிசையாக சீரியல்களிலும், 75 படங்களிலும் மீனா நடித்துள்ளார்.

serial-actress-meena-cinemapettai
serial-actress-meena-cinemapettai

அத்துடன் இவர் மறைந்த இயக்குனர் தாமிராவின் இரட்டை சுழி படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிற்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் உடனே இணைந்த நடித்திருப்பது மீனாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று அவர் தனது ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

ஒரு சின்ன கிராமத்திலிருந்து வந்த கம்பம் மீனா, இன்று சின்னத்திரை முதல் வெள்ளிக்கிழமை வரை தன்னுடைய தனித்துவமான பேசினாலும் நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்