மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ரெட் ஜெயண்ட்.. லியோவுக்கு பதிலாக 2 படங்களை லாக் செய்த உதயநிதி

Leo-Red Giant: உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய படங்களை விநியோகம் செய்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாகவே ரெட் ஜெயண்ட் அதிகமாக படங்களை வெளியிடவில்லை. கடைசியாக சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் விஜய்யின் லியோ. கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூலை பெறும் என்று எதிர்பார்க்கும் நிலையில் உதயநிதி இடம் இந்த படம் போகவில்லை. வாரிசு படமே சென்னையில் முக்கிய இடங்களில் மட்டும் தான் உதயநிதி வெளியிட்டார். இப்போது லியோ படத்தை லலித் வெளியிடுகிறார்.

ஆகையால் ரெட் ஜெயண்ட் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறது. எனவே லியோவுக்கு பதிலாக இரண்டு பெரிய படங்களை தட்டி தூக்கியிருக்கிறது. ஆகையால் இந்த படங்கள் மூலம் பெரிய லாபம் உதயநிதிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்.

அந்த வகையில் பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை உதயநிதி தான் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார். மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இதேபோல் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்.

சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போது கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார். அதுவும் லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா காம்போவில் இந்த படம் உருவாகி இருக்கிறது. எனவே எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக தான் இருக்கிறது.

காரணம் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யா பிச்சு உதறி இருந்தார். அவரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் கிடையாய் கிடந்து வருகிறார்கள். ஆகையால் இந்த தீபாவளிக்கு வெளியாகும் அயலான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ரெட் ஜெயண்ட் கைவசம் சென்றிருக்கிறது.