பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்படுகின்றது என்ற பேச்சு சமீபகாலமாக இருந்து வருகிறது. மேலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்த சுஷாந்த் சிங் மரணத்திற்கும் நிப்போட்டிசம் தான் காரணம் என கூறப்பட்டது.
அங்குள்ள நடிகர்களுக்கே இந்த நிலைமை என்றால் தமிழ் நடிகர்களை சுத்தமாக வளர விட மாட்டார்கள் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் பாலிவுட் படங்களில் கால் பதித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் விக்ரம் படம் வெளியான நான்காவது வாரத்தில் 400 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது.
விக்ரம் படம் ஹிந்தியிலும் வெளியானது. இப்படம் வெளியான அதே நாளில் பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் பிரித்திவிராஜ் படமும் வெளியானது. ஆனால் இப்படம் தோல்வியை சந்தித்தது. எதிர்பார்த்த அளவு இப்படத்திற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வராததால் இப்படத்தை வெளியிடவில்லை.
இதனால் பிரித்திவிராஜ் படத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த திரையரங்குகளில் பழைய பாலிவுட் படங்களை திரையிட்டு வருகின்றனர். அதாவது பாலிவுட்டில் இருக்கும் அடக்குமுறை கொண்ட பிரபலங்கள் விக்ரம் படத்தை வெளியிடாமல் பழைய பாலிவுட் படங்களையே ஒளிபரப்பு செய்துள்ளனர்.
அந்தத் திரையரங்குகளிலும் விக்ரம் படத்தை திரையிடப்பட்டு இருந்தால் விக்ரம் படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருக்கும். தென்னிந்திய நடிகர்கள் யாரும் நீங்கள் வளர கூடாது என்பதற்காகவும் சூசகமாக பழைய பாலிவுட் படங்களை அந்த திரையில் ஒளிபரப்பு செய்துள்ளனர்.