ஊடகத்தை அலறவிட்ட ஷீனா போரா வழக்கு.. புதைக்கப்பட்ட உண்மையை சொல்லும் இந்திராணி முகர்ஜி வெப் சீரிஸ்

Indrani Mukerjea Story: கடந்த 2015 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த ஊடகத்தையும் அலறவிட்ட ஷீனா போரா வழக்கில் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டார். தனியார் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியான இவர் தன் சொந்த மகளையே சகோதரி என்று தான் அறிமுகப்படுத்தினார்.

2012 ஆம் ஆண்டு ஷீனா காணாமல் போய்விட்டார் என சொல்லப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பல உண்மைகள் வெளிவந்தது. இந்திராணியின் டிரைவரை வேறொரு வழக்கில் கைது செய்து விசாரணை செய்தபோது இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதில் இந்திராணி தன் மகளை கழுத்தை நெரித்துக் கொன்று எரித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணியின் முன்னாள் கணவர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Also read: யார் இந்த ரோடு ராஜா.? விழிப்புணர்வு ஏற்படுத்திய விக்னேஷ் சிவன்

பல வருட போராட்டத்திற்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த இந்திராணி தன் மகள் சாகவில்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்படி மர்மமும் சிக்கலும் நிறைந்த இந்த கொலையின் பின்னணி காரணம் என்று பார்த்தால் ஷீனா போராவுக்கும் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகன் ராகுலுக்கும் இருந்த காதல் தான்.

இந்த முறையற்ற உறவால் தான் இந்த கொலை நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் விசாரணையில் இந்திராணி தன் மகள் சாகவில்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். இந்த சூழலில் தான் தற்போது நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் இது தொடர்பான ஆவணப்படம் வெப் சீரிஸ் ஆக வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் 23ஆம் தேதி இந்த சீரிஸ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ தரப்பிலிருந்து அதற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் நேற்று இந்த வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. அதில் இந்திராணி சொல்லப்படாத பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ரீ ரிலீஸ் பண்ணியாச்சும் காசு பார்க்கலாம்.. தியேட்டர்களுக்கு ஆப்பு வைச்ச பிரபல சேனல்

Next Story

- Advertisement -