இந்தியாவின் No.1 கோடீஸ்வர சினிமா குடும்பம்.. ஷாருக், சல்மானை மிஞ்சிய சொத்து மதிப்பு

India’s No.1 billionaire cinema family: இப்போதெல்லாம் நடிகர்கள் கோடி கணக்கில் தான் சம்பளம் வாங்குகின்றனர். இதனால் இவர்களின் சொத்து மதிப்பும் தாறுமாறாக எகிறுகிறது. இந்தியாவில் நம்பர் ஒன் கோடீஸ்வர சினிமா குடும்பம் என்ற பெருமையை அக்கட தேசத்து நடிகரின் குடும்பம் தான் பெற்றிருக்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கானை விட அதிகம். தற்போதைய நிலையில் ஷாருக்கானின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் 5500 கோடி. அதே போல் சல்மான் கானின் சொத்து மதிப்பு 2850 கோடி.

 அதாவது தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அது மட்டுமல்ல இப்போது தெலுங்கு நடிகர்கள் தான் இந்திய திரை உலகை ஆட்சி செய்வது போன்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. அல்லு கொனிடேலா குடும்பத்தில் இருந்து மட்டும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கின்றனர்.

இந்த குடும்பத்தை மெகா குடும்பம் என்றே சொல்லலாம். இந்த குடும்பத்தில் இருந்து முதல் முதலாக அல்லு ராமையா தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராகவும், அதன் பின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தவர். இவருடைய மகன்தான் அல்லு அரவிந்த். இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தர் மற்றும் தொழிலதிபராக கொடி கட்டி பறந்தவர்.

Also Read: 2023-ல் அனிருத் பாடி மெகா ஹிட் ஆன 5 பாடல்கள்.. தலைவரை டாப்புக்கு ஏற்றிய ஹுக்கும் பாடல்

அதிக சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் சினிமா குடும்பம்

அல்லு அரவிந்தின் மகன்கள் தான் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ். அல்லு அர்ஜுன் தற்போது தெலுங்கில் டாப் நடிகராக ரவுண்டு கட்டுகிறார். இவருக்கு சொந்தமாக ஆஹா என்ற ஓடிடி தளம் இருக்கிறது. மேலும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, நடிகர் அல்லு ராமையாவின் மகள் என்பதால் சிரஞ்சீவியும் அல்லு கொனிடேலா குடும்பத்தில் இணைகிறார்.

சொல்லப்போனால் இந்த குடும்பம் தான் மொத்த திரை உலகமே ஆட்சி செய்கிறது. அது மட்டுமல்ல தெலுங்கு சினிமாவில் பாதி பேர் இவர்களது குடும்ப உறுப்பினர்கள் தான். இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு மட்டும் மொத்தம் 6000 கோடி இருக்கும். அதிலும் சிரஞ்சீவி மற்றும் அவருடைய மகன் ராம்சரண் இவர்களின் சொத்து மட்டும் 1500 கோடி.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் பாலிவுட்டில் பல பிசினஸ்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ஷாருக்கான், சல்மான் கானை விட அல்லு கொனிடேலா குடும்பத்தின் சொத்து மதிப்பு அதிகம். அதுமட்டுமல்ல இந்த குடும்பத்திலிருந்து அடுத்தடுத்து இன்னும் இளம் நடிகர் நடிகைகள் உருவெடுத்துக் கொண்டிருப்பதால் இவர்களின் சொத்து மதிப்பு இன்னும் பன்மடங்கு பெருகிக் கொண்டே தான் போகும்.

Also Read: 1000 கோடி வசூலுக்குப் பின் மீண்டும் இணையும் அட்லி கூட்டணி.. 2200 கோடி பட்ஜெட்டில் கமிட்டான ஷாருக்கான்