ஒரே நேரத்தில் தியேட்டரிலும் OTTயிலும் ரிலீஸாகும் முதல் படம் இதுதான்.. விவரமான முடிவெடுத்த முன்னணி நடிகர்

கடந்த ஒரு வருட காலமாகவே தியேட்டர்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது குதிரைக் கொம்பாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி நினைத்த அளவுவரவேற்பை பெறவில்லை என்றால் பெரிய நஷ்டத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

இதன் காரணமாக இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் தியேட்டர்களில் படங்களை வெளியிட தயங்கிக் கொண்டிருந்த நிலையில் விஜய் தன்னுடைய அசாத்திய முடிவால் மாஸ்டர் பட்டத்தை களமிறங்கினார்.

எதிர்பார்த்ததைவிட மாஸ்டர் திரைப்படம் உலகமெங்கும் ஏகப்பட்ட வசூலை அள்ளிக் குவித்தது. இதனை பார்த்த இந்திய சினிமா நடிகர்கள் பலரும் மீண்டும் தங்களுடைய படங்களை தியேட்டரில் வெளியிட முன் வந்தனர்.

அதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மிகப் பெரிய படங்கள் அனைத்துமே தொடர்ச்சியாக ரிலீஸ் தேதியை வெளியிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென மீண்டும் கொரானா பரவல் அதிகமாக இருப்பதால் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளடைவில் தியேட்டர்களை இழுத்து மூடவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே படம் வருகிற மே 13ஆம் தேதி தியேட்டரிலும் அதேநேரம் ஜீபிளக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் பணம் கட்டி பார்க்கும் முறையில் வெளியாக உள்ளது.

முன்னதாக மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ராதே திரைப்படம் சரியாக செல்லவில்லை என்றால் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய படங்களை நேரடியாக ஓடிடிக்கு கொடுக்க ரெடியாக இருக்கின்றனர்.

radhe-cinemapettai
radhe-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்