தென் ஆப்பிரிக்கா டூரில் ரெஸ்ட் கேட்கும் சீனியர்.. காசுன்னா மட்டும் ஐபிஎல் விளையாட ரெடி

பொதுவாக இந்த ஐபிஎல் போட்டிகளை முன்னணி வீரர்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க காசு சம்பாதிக்கும் போட்டியாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்த அணிதான் கோப்பையை வெல்லும் என்று சிலர் உறுதியாகச் சொல்கின்றன. அதனால் இது முன்னாடியே பெட்டிங் செய்யப்பட்டது போல் தோன்றுகிறது.

இதில் எல்லா வீரர்களும் திறமையை நிரூபித்து காசு சம்பாதிக்க போட்டி போட்டுக்கொண்டு விளையாடுகின்றனர் அதனால் அவர்களுக்கு உடல் உபாதைகளும், காயங்களும் ஏற்படுகின்றன. இதனால் இவர்கள் நாட்டிற்காக விளையாடும் போட்டியில் சோபிக்க தவறுகின்றனர்.

இதில் உள்ளூர் வீரர்கள் பலர்ஆக்ரோஷமாக மோதிக் கொள்கின்றனர். இது எல்லாத்துக்கும் காரணம் அந்த போட்டிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதன் அடிப்படை காரணமே. இதற்கு பல நாடுகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

குறிப்பாக இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியாவிற்கு சென்று ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு தடை அறிவித்துள்ளனர். அதையும் தாண்டி சில வீரர்கள் காசுக்காக இங்கே வந்து விளையாடுகின்றனர்.

இப்பொழுது இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ஓய்வின்றி இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் தென்னாப்பிரிக்கா செல்லவிருக்கிறது இந்திய அணி.

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஓய்வு கேட்டு வருகிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர் இவ்வாறு ஓய்வு கேட்கிறார். ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டு இந்தியாவிற்காக விளையாடும் போது மட்டும் ஏன் ஓய்வு கேட்கிறார் என்று முன்னாள் இந்திய வீரர்கள் பலர் விராட் கோலியை விளாசி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்