சம்மருக்கு சம்பவம் செய்ய காத்திருக்கும் 4 படங்கள்.. இந்தியன் தாத்தாவை ஆட்டம் காண வைக்க போகும் வளர்ப்பு பையன்

Indian movies released in summer 2024: கோடை விடுமுறை  மற்றும் தமிழ் புத்தாண்டை காரணமாக கொண்டு பல படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது அவற்றில் சில,

கங்குவா: இந்திய திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கங்குவா, ஏப்ரல் 11 அன்று 38 மொழிகளில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில்  சூர்யா பல வேடங்களில்  நடிக்கும் கங்குவா சரித்திர கதையாக இருக்கும் என ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் சரித்திர பின்னணி கொண்ட நாயகனின் சமகாலத்து கதையாக இருக்கும் என பல பல ரகசியங்கள் கசிந்த வண்ணம் உள்ளது.

இந்தியன் 2: பிரம்மாண்டத்திற்கு  குறைவில்லாமல் நான்குஆண்டுகளுக்கு மேல் ரெடி ஆகி வரும் உலகநாயகனின் இந்தியன் 2, ஏப்ரல் மாதம் 12 தேதி ரிலீஸ் செய்யப்படும் என நம்பத்தக்க தகவல்கள் வந்துள்ளது. மலிந்து கிடக்கும் ஊழல், அதை எதிர்த்து நிற்கும்  துணிச்சலான தாத்தா, எதிர்க்க முடிந்ததா என்பதை சுவாரசியங்களுடன்  சுறுசுறுப்பாக சொல்ல வருகிறார் இந்தியன் தாத்தா.

கமல் மற்றும் சிவக்குமார் இருவருக்கும் அண்ணன் தம்பி போல் நெருங்கிய பந்தம் இருக்கிறது. சூர்யா என் தம்பி கமலை பார்த்து தான் வளர்ந்தவன் என பல பேட்டிகளில் சிவகுமார் கூறியிருக்கிறார். கமல் சினிமாவில் பல நுணுக்கங்களை சூரியாவிற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

Also read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!

தேவாரா: கொரட்டாலா சிவாவின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வரும் தேவாராவில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகின்றனர் பரப்பான த்ரில்லர் உடன் கூடிய தேவாராவின் முதல் பாகம் ஏப்ரல் 5 திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடுஜீவிதம்: சில வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் கொரோனா காரணமாக தாமதம் ஆனது. இக்காலத்தில் படப்பிடிப்புக் குழுவினர் ஜோர்டானில் 70 நாட்கள் மாட்டிக்கொண்டனர் என்பது கூடுதல் செய்தி. மலையாள நாவலின் தழுவலாக உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு ரெடியான பிரித்விராஜின் ஆடுஜீவிதம் மூவி ஏப்ரல் 10 அன்று திரைக்குவரவிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளியாக பிரித்விராஜ் நடித்துள்ளார். இசை ஏஆர் ரகுமான்.

Also read: இந்தியன்-2 முதல் கங்குவா வரை.. ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இதுவரை நடந்த கொடூரமான விபத்துக்கள்