கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட இந்தியன் 2 தாத்தா.. சங்கரின் உழைப்புக்கு ஆப்பு கன்ஃபார்ம்

Indian grandfather kamal Haasan who threw principles to the wind: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலகநாயகன் கமலஹாசனின் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன்.

ஊழலை வேரறுத்து அரசாங்க இயந்திரத்தை பழுது பார்ப்பது போல்  பல செயற்கரிய செயல்களை செய்து இருந்தார் இந்தியன் தாத்தா. 

பல வருடங்களுக்குப் பின் அதே உத்வேகத்துடன் பல டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்பட்ட காட்சிகளுடன் கலக்க வருகிறார் தாத்தா.

“இந்தியன் இஸ் பேக்” என்று புரட்சிகரமாக வரும் உலக நாயகனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ் ஜே சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களும் கூட்டணி அமைத்துள்ளனர்.

அனிருத் இசையில் லைகாவின் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது இந்தியன்.

கிட்டதட்ட இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தியன் 2  படத்தை வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் ரிலீஸ் செய்வது என்று முடிவெடுத்துள்ளனர் படக் குழுவினர்.

சினிமாவை தவிர உலக நாயகன் தற்போது அரசியலிலும் கவனம் செலுத்தி மக்கள் நீதி மய்யம் என்கின்ற தனது கட்சியை முன்னேற்றி செல்வதற்கு ஊழல் வாதிகளுடன் ஊறிப்போன கட்சியில் கூட்டணி வைத்துள்ளார்.

இந்தியன் படம் லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்டது. ஆனால் இன்று கமல் கூட்டணி வைக்கும் கட்சி எல்லாம் லஞ்சத்தில் ஊறிப்போன கட்சிகளாக இருக்கிறது.

இரட்டை வேடம் போடும் உலகநாயகன் கமலஹாசன்

சினிமாவில் ஊழலுக்கு எதிராக பக்கம் பக்கமாக வசனம் பேசும் கமல் ரியல் டைமில் இப்படி ஊழல்வாதிகளுடன் கூட்டணி சேர்வது என்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

“நிழல் வேறு! நிஜம் வேறு!” என்றாலும் அதை பிரித்துப் பார்க்கும் அளவுக்கு ரசிகனுக்கு சக்தி இல்லை என்பது தான் உண்மை. சினிமாவில் எதை உணர்கிறானோ, அதையே நிஜத்திலும் கடைபிடிப்பது தான் ரசிகனது வேலை.

அப்படி இருக்கும்போது இரட்டை வேடம் போடும் கமலால் அரசியலில் ஜெயிப்பது என்பது ஒரு பக்கம் கேள்விக்குறியாக இருந்தாலும், 

அரசியல் ஆதாயத்திற்காக இப்படி ஊழல் வாதிகளுடன் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றும் கமல் மற்றும் அவரது படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது தான் சங்கருக்கு இருக்கும் மாபெரும் சவாலாக உள்ளது.

தற்போது பன்னோக்கு சிந்தனையுடன் திரைக்கதையை எதிர்கொள்ளும் ரசிகர்கள் தவறு தென்படும் பட்சத்தில் உடனுக்குடன் பதில் அளிக்கவும் தவறுவதில்லை என்பதை உண்மை!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்